மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள்

உலக அளவில் மிகப் பெரிய ஆறு பன்னாட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்களை மாபெரும் எண்ணெய் நிறுவனங்கள் என்று பொதுவாகக் குறிப்பர். இவை எந்த ஒரு அரசையும் சாராதவை. இவர்களை எண்ணெய் அரக்கர் (Big Oil) என்று நொசிவாகவும் குறிப்பிடுவது உண்டு.

நிறுவனங்களின் பட்டியல்:

தொண்ணூறுகளில் கரட்டுநெய் விலை வீழ்ச்சி அடைந்த சமயம் இந்தப் பெரிய நிறுவனங்கள் உருவாக ஆரம்பித்தன. ஏற்கனவே பெரிதாய் இருந்த பெட்ரோலியம் நிறுவனங்கள் பொருளாதார நிமித்தம் ஒன்றோடு ஒன்று இணைந்து மாபெரும் நிறுவனங்கள் ஆகின. தற்போது இந்த நிறுவனங்களுள் பெரியது எக்சான் மோபில் நிறுவனம் ஆகும். இவை ஆறும் சேர்ந்து உலக எண்ணெய் வளத்தில் ஏறத்தாழ 5% கொண்டிருக்கின்றன.