உள்ளடக்கத்துக்குச் செல்

பீ.பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீ.பி (BP p.l.c)[1] ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவளி நிறுவனமாகும். இலண்டனில் தலைநகரைக் கொண்ட இந்நிறுவனம் மாபெரும் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றாகும். உலகில் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. முன்னர் பிரிட்டிசுப் பெட்ரோலியம் என்று இருந்த பெயரை அதன் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்டு பீ.பி என்று மாற்றிக் கொண்டது.

1998ல் அமாக்கோ என்னும் நிறுவனத்தினோடும், பிறகு 2000ல் ஆர்க்கோ என்னும் நிறுவனத்தோடும் இணைந்ததன் மூலம் உலகளவில் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனமாக மாறிவிட்டது.

அண்மையில் அமெரிக்கக் கடலில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபத்தில் பெருத்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BP plc. "BP plc 2009 Securities and Exchange Commission Form 20-F"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 11 Jun. 2010. பரணிடப்பட்டது 2010-05-04 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ.பி&oldid=3268983" இலிருந்து மீள்விக்கப்பட்டது