மாக் ஓஎசு எக்சு மாவரிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Osx-mavericks-logo.png
ஓஎசு எக்சு v10.9 மாவரிக்சு
(ஓ.எசு எக்சு குடும்பம்)
திரைக்காட்சி
Osx-mavericks-screenshot.jpg
ஓஎசு எக்சு மாவரிக்சு
விருத்தியாளர்
ஆப்பிள் நிறுவனம்
Web site: அதிகாரப்பூர்வ இணையதளம்
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: அக்டோபர் 22, 2013 info
தற்போதைய பதிப்பு: 10.9 (அக்டோபர் 22, 2013 (2013-10-22)) info
மூலநிரல் : அடைக்கப்பட்ட மூலநிரல் ( திறந்த மூலநிரல் கூறுகளுடன்)
அனுமதி: ஆப்பிள் பொது மூலநிரல் உரிமம், பெர்க்லி மென்பொருள் பரவல், குனூ பொதுமக்கள் உரிமம், மற்றும் ஆப்பிள் அறுதிப் பயனர் உரிம உடன்பாடும் வெளிப்படுத்தாமை உடன்பாடும்
கருவகம் வகை: கலப்பினம்
ஆதரவு நிலை
ஆதரவுள்ளது

ஓஎசு எக்சு மாவரிக்சு (OS X Mavericks) ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கணினிகளுக்கான மேசைக்கணினிகள் மற்றும் வழங்கிகளுக்கான இயக்கு தளம் மாக் ஓஎசு எக்சு தொடரில் பத்தாவது முதன்மைப் பதிப்பாகும். இது சூன் 10, 2013 அன்று ஆப்பிள் உலகளாவிய உருவாக்குனர் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு அக்டோபர் 22, 2013 அன்று பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இது மாக் செயற்பொருள் அங்காடியிலிருந்து (Mac App Store) விலையின்றிப் பெறும் வகையில் இற்றைப்படுத்தலாக வழங்கப்படுகிறது.[1][2]

இப்பதிப்பில் மின்கலங்கள் நீண்டநேரம் பயன்படுத்தக்கூடியமை, ஃபைண்டர் மென்பொருளில் மேம்பாடுகள், ஐகிளவுட் ஒருங்கிணைப்பு, வல்லுனர்களுக்கு பிற மேம்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்பிளின் ஐஓஎஸ் செயற்பொருள்களும் ஓஎசு எக்சு தளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பதிப்புகள் பூனை/புலி வகைகளின் பெயரில் வெளியாயின; இதிலிருந்து விலக்காக இந்தப் பதிப்பு வடக்கு கலிபோர்னியாவில் உள்ள மாவரிக்சு என்ற கடலோர நகரை ஒட்டிப் பெயரிடப்பட்டுள்ளது.[1][3]

மேற்சான்றுகள்[தொகு]