மாவரிக்சு (இடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லர் பாயிண்ட்டிற்குகடற்புறத்தே உள்ள மாவரிக்சு (ஒளிப்படம்).
மாவரிக்சில் அலை உடைப்பு

மாவரிக்சு (Mavericks) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கே உள்ள ஓர் அலைச்சறுக்கு தலமாகும்.இது பில்லர் பாயிண்ட் துறைமுகத்திலிருந்து ஏறத்தாழ 2 மைல்கள் (3.2 கிமீ) தொலைவில், ஆஃப் மூன் பே நகரத்திற்கு சற்று வடக்கில் அமைந்துள்ளது. அமைதிப் பெருங்கடலில் உருவாகும் குளிர்கால சூறாவளிகளால் இங்கு வழக்கமாக அலைகள் 25 அடி (7.6 மீ) உயரத்திற்கும் மிகக்கூடிய அளவில் 80 அடி (24 மீ) உயரத்திற்கு எழுகின்றன. அலை உடைப்பு நீரடியில் உள்ள வழமையல்லாத பாறைகளின் அமைப்பினால் ஏற்படுகிறது. இதனால் அலைச்சறுக்கிற்கு ஏற்றவகையில் அலைகள் குழாய்வடிவமாக உருவாகின்றன.

உலகின் மிகச் சிறந்த அலைச்சறுக்கு விளையாட்டாளர்களின் மிக விரும்பப்படும் குளிர்கால சுற்றுலாத் தலமாக உள்ளது. பெரும்பாலான குளிர்காலங்களில் இங்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான அலைச்சறுக்கு போட்டி நடத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவரிக்சு_(இடம்)&oldid=2204706" இலிருந்து மீள்விக்கப்பட்டது