மல்லேல தீர்த்தம்
மல்லேல தீர்த்தம் | |
---|---|
மல்லேல தீர்த்தம் அருவி தோற்றம் | |
![]() | |
அமைவிடம் | மல்லேல தீர்த்தம் நாகர்கர்னூல் மாவட்டம், தெலங்காணா |
ஆள்கூறு | 16°15′58″N 78°51′23″E / 16.266144°N 78.856403°E |
வகை | நீர்வீழ்ச்சி |
வீழ்ச்சி எண்ணிக்கை | பல |
மல்லேல தீர்த்தம் (Mallela Theertham) என்பது இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள நாகர்கர்னூலில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும்.[1] நல்லமலா காட்டின் வழியாகக் கிருஷ்ணா ஆறு ஓடுகிறது. இது ஸ்ரீசைலத்திலிருந்து 58 கி. மீ. தொலைவிலும் ஐதராபாத்திலிருந்து 185 கி. மீ. தொலைவிலும் உள்ளது.
அருவி[தொகு]
அடர்ந்த காடுகளுக்கு நடுவே மல்லேல தீர்த்தம் உள்ளது. இந்த அருவியினை அணுக 350 படிகள் கடந்து நடக்க வேண்டும்.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் அருவியில் நீர்வரத்து அதிகமாகக் காணப்படும். மார்ச் முதல் சூன் வரை வறண்ட காலம். மீதமுள்ள மாதங்கள் மழைக்காலம் என்பதால் சேறும் சகதியுமான சாலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினம். இந்த பகுதியிலிருந்து ஒரு சிறிய ஓடையில் தண்ணீர் ஓடிவருகிறது.
அடர்ந்த காட்டுக்குள் பாய்ந்து செல்லும் இந்த ஓடை கிருஷ்ணா ஆற்றில் அச்சம்பேட்டைக்கு அருகில் கலக்கின்றது.
வரலாறு[தொகு]
பல முனிவர்கள் இங்குச் சிவனை வேண்டித் தவம் செய்ததாகவும், சிவபெருமான் தனது பக்தர்கள் பலருக்கு இங்கு காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது. கோடைக் காலத்தில் தண்ணீர் அருந்த வனப்பகுதியிலிருந்து புலிகள் இங்கு வருவதாக நம்பப்படுகிறது.
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mallela Theertham waterfalls". 22 November 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 April 2015 அன்று பார்க்கப்பட்டது.