மலோரி கஹன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லோரி ஹகன்
பிறப்புமல்லோரி ஹைட்ஸ் ஹகன்
திசம்பர் 23, 1988 (1988-12-23) (அகவை 35)
மெம்பிஸ் டென்னிசி
இருப்பிடம்புருக்ளின், நியூயார்க் நகரம்
பணிநடிகை, செய்தி வாசிப்பாளர்
சொந்த ஊர்ஒபேலிக்கா,அலபாமா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
பட்டம்மிஸ் புரூக்ளின் 2010
மிஸ் மன்ஹாட்டன் 2011
மிஸ் நியூயார்க் நகரம் 2012
மிஸ் நியூயார்க் நகரம் 2012
மிஸ் நியூயார்க் நகரம் 2013
பதவிக்காலம்ஜனவரி 12, 2013செப்டம்பர் 15, 2013
முன்னிருந்தவர்லாரா கேப்பெல்லர்
பின்வந்தவர்நினா டவுலுரி
வலைத்தளம்
itsmalloryhagan.com

மல்லோரி ஹைட்ஸ் ஹகன் (Mallory Hytes Hagan; பிறப்பு: டிசம்பர் 23, 1988) என்பவர் அமெரிக்க நடிகை , வடிவழகி, மற்றும் அழகிப் பட்டங்கள் வென்றவர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டின் அமெரிக்க அழகி மற்றும் 2012 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப் பட்டம் வென்றவர் ஆவார். மேலும் 2012 நியூயார்க் நகரம் அழகி , 2011 மன்ஹாட்டன் அழகி, 2010 புரூக்ளின் அழகிப் பட்டங்களையும் பெற்றுள்ளார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மல்லோரி ஹைட்ஸ் ஹகன் டிசம்பர் 23, 1988 இல் ஒபேலிக்கா, அலபாமாவில் பிறந்தார். ஒபேலிக்கா உயர்நிலைப்பள்ளியில் 2007ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். இவரின் தாய் ஒபேலிக்கா பகுதியில் நடனப் படமனை ஒன்றை நடத்திவருகிறார்.[2] டென்னிசியில் இவரின் பாட்டி நடனப் படமணை ஒன்றை நடத்தி வருகிறார்.[3] இவர் ஆபர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.இந்தப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் பிரிவில் கல்வி பயின்றார்.[4] மேலும் இவர் பெண்களுக்கான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பி பேடா பி அலபாமா எனும் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.[5] இந்த அமைப்பில் இருந்து ஒரு நபர் பெறும் நான்காவது அமெரிக்க அழகி விருது இது ஆகும். இதற்கு முன் மர்லின் வன் தெபர், ஜாக்கி மேயர், மற்றும் சூசன் அகின் ஆகியோர் இதற்கு முன் பெற்றுள்ளனர்.[6]

அக்டோபர் 2008 இல் ஹகன் புரூக்ளின் அருகில் உள்ள பெட்ஃபோர்ட் பகுதியில் குடியேறினார்.[7] அந்த சமயத்தில் அவரிடம் $1000 பணமும் , அழகியாகவேண்டும் என்ற கனவும் இருந்தது.[8] இவர் அமெரிக்க அழகிப்பட்டத்தை வென்ற போது அவர் பார்க் ஸ்லோப்பில் வசித்ததாக சில தகவல்கள் உள்ளன[9]. ஆனால் அவர் விண்ஸர் டெர்ரஸ், புரூக்ளினில் இருந்ததாக த நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.[10] ஹகன் 2008 இல் புரூக்ளின் வந்தது முதல் அவர் 2013 இல் அமெரிக்க அழகிப் பட்டத்தைப் பெற்றது வரை [11] சன்செட் பார்க் மாற்றும் வில்லியம்ஸ்பர்க் உள்ளிட்ட ஆறு இடங்களில் குடியேறினார். [9]

2013 ஆம் ஆண்டில் அமெரிக்க அழகிப் போட்ட்டியின் போது அவர் ஃபேஷன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்து வந்தார்.[12] அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்தல், மற்றும் பேரார்வத்தோடு வாசனைத் திரவியம் மற்றும் அழகு சாதனைப்பொருட்களை விளம்பரம் செய்தல் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். [13]இவர் பல விதமான முறைகளில் அழகிப்போட்டிகளில் பங்குபெறுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டார். இவர் ரிச்சர்டு டேலன்ஸ், சோஹீ லீ, மறும் மார்க் ஃபிஷர் உள்ளிட்ட பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். [14]

அழகிப் போட்டி[தொகு]

மார்ச் 28, 2010 இல் புரூக்ளின் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார்.[15] இதற்குமுன்பாக அலபாமா அழகிப்போட்டி மற்றும் அலபாமா அழகிபோட்டியின் சிறந்த பதின்ம பெண் ஆகிய போட்டிகளில் மேலடல்செறிஞர் இடம் பிடித்தார்.[16] 2008 ஆம் ஆண்டின் அலபாமா அழகிப்போட்டியின் போது பட்டம் வெல்வதே தனது இலக்கு எனத் தெரிவித்தார்[17]. ஹகன் தனது 13 வயது முதல்17 வயது வரை அலபாமா அழகிபோட்டியின் சிறந்த பதின்ம பெண் போட்டியில் போட்டியிட்டார். [17]

2010 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டி மற்றும் 2011 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டிகளில் மேலடல்செறிஞராக வந்தார். [18]பின் 2012 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றார். அந்தப் போட்டியில் 2014 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற நினா டவுலுரி மேலடல்செறிஞரானார். [19]

சான்றுகள்[தொகு]

 1. "Mallory Hagan". Miss Brooklyn 2010. Miss Brooklyn Scholarship Competition. Archived from the original on சனவரி 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
 2. "Miss New York calls Opelika, AL home". WTVM. January 11, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
 3. "Mallory Hagan Talks About Being Crowned Miss America 2013 (see video)". Fox News. January 15, 2013. Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
 4. Harvey, Alec (January 14, 2013). "'War Eagle!': Miss America Mallory Hagan talks football and growing up in Opelika (gallery)". AL.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
 5. "Notable Pi Phis". Pi Beta Phi. Archived from the original on 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
 6. Pi Beta Phi (January 14, 2013). "@PiBetaPhiHQ status". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
 7. "Mallory Hagan". Miss Brooklyn 2010. Miss Brooklyn Scholarship Competition. Archived from the original on சனவரி 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
 8. Yee, Vivian (January 13, 2013). "Crowned Miss America 2013, Living in a Borough of Ms". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
 9. 9.0 9.1 Schapiro, Rich (January 12, 2013). "Miss New York, Brooklynite Mallory Hagan, crowned Miss America: Hagan, 24, is a Fashion Institute Technology student from Park Slope, Brooklyn". Daily News. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
 10. "Miss New York Mallory Hagan Named Miss America 2013". The Wall Street Journal. January 13, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
 11. Harvey, Alec (January 14, 2013). "'War Eagle!': Miss America Mallory Hagan talks football and growing up in Opelika (gallery)". AL.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
 12. Chung, Jen (சனவரி 13, 2013). "Photos, Videos: New Miss America Mallory Hagan Is From Park Slope!". Gothamist. Archived from the original on சனவரி 14, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
 13. "Miss America 2013: Miss New York Mallory Hagan Wins". Us Weekly. January 13, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
 14. "Fitocracy: the NYC Fitness App That Helped Miss America Ace the Bikini Competition". The New York Observer. January 15, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
 15. "Mallory Hagan". Miss Brooklyn 2010. Miss Brooklyn Scholarship Competition. Archived from the original on சனவரி 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
 16. "Meet the new Miss America 2013 Mallory Hagan". Beauty Pageant News. January 14, 2013. http://beautypageantnews.com/meet-the-new-miss-america-2013-mallory-hagan/. பார்த்த நாள்: January 14, 2013. 
 17. 17.0 17.1 Harvey, Alec (January 14, 2013). "'War Eagle!': Miss America Mallory Hagan talks football and growing up in Opelika (gallery)". AL.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
 18. "Meet the new Miss America 2013 Mallory Hagan". Beauty Pageant News. January 14, 2013. http://beautypageantnews.com/meet-the-new-miss-america-2013-mallory-hagan/. பார்த்த நாள்: January 14, 2013. 
 19. Perone, Tim (June 17, 2013). "B'klynite crowned Miss NY". New York Post.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலோரி_கஹன்&oldid=3587837" இலிருந்து மீள்விக்கப்பட்டது