மலேய பறக்கும் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேய பறக்கும் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ஜாங்கிக்சாலசு
இனம்:
ஜா. புரோமினானசு
இருசொற் பெயரீடு
ஜாங்கிக்சாலசு புரோமினானசு
(சுமித், 1924)

மலேய பறக்கும் தவளை (Malayan flying frog)(ஜாங்கிக்சாலசு புரோமினானசு) என்பது பாசி தவளை குடும்பத்தினை (ராகோபோரிடே) சார்ந்த தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.

இது ஒரு பெரிய பறக்கும் தவளை வகையாகும். பெண் தவளையின் உடல் நீளம் 7.6 செ.மீ. வரை இருக்கும். ஆண் தவளை 6.2 செ.மீ. வரை வளரும். இது முதுகு பொதுவாகப் பச்சை நிறமாகவும், சிறியதாக இருக்கும் போது ஓரளவு ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கும்.

தலைப்பிரட்டை சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். உடலில் அடையாளங்கள் இல்லை. உருமாற்றம் அடையும்போது இவை பசுமையாகக் காணப்படும். இவை வளர்ந்து உடல் நீளம் சுமார் 30-33 மி.மீ. அளவு வரும்போது வால் இழக்கப்படுகிறது. புதிதாக உருமாறும் இளம் தவளை 15 மி.மீ. ஆகும். பல் வரிசை சூத்திரம் சிறிய தலைப்பிரட்டையில் 5(2-5)/3 மற்றும் முதிர்வடைந்த தவளையில் 6(2-6)/3 ஆகும்.[2]

இதன் இயற் வாழிடம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 600 மீட்டர் உயரத்தில் உள்ள மிதவேப்பமண்டல மற்றும் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2] இது ஆறுகள், இடைப்பட்ட ஆறுகள் மற்றும் இடைப்பட்ட நன்னீர் சதுப்பு நிலங்களிலும் வாழ்கிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறுத்தப்பட்ட சிற்றினமாகக் கருதப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jeet Sukumaran, Peter Paul van Dijk, Yodchaiy Chuaynkern, Djoko Iskandar, Norsham Yaakob, Leong Tzi Ming (2004). "Zhangixalus prominanus". IUCN Red List of Threatened Species 2004: e.T59015A11868932. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T59015A11868932.en. https://www.iucnredlist.org/species/59015/11868932. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Leong Tzi Ming (2004). "Larval descriptions of some poorly known tadpoles from Peninsular Malaysia (Amphibia: Anura)" (PDF). Raffles Bulletin of Zoology 52 (2): 609–620. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/52/52rbz609-620.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேய_பறக்கும்_தவளை&oldid=3438055" இலிருந்து மீள்விக்கப்பட்டது