பறக்கும் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலசின் பறக்கும் தவளை (ராகோபோரசு நிக்ரோபால்மடசு )
படம்: மலாய் தீவுக்கூட்டத்திலிருந்து

பறக்கும் (flying frog) தவளை (வழுக்கும் தவளை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சறுக்கும் தன்மையின் மூலம் பறக்கக்கூடிய தவளை ஆகும். அதாவது, கிடைமட்டத்திலிருந்து 45°க்கு குறைவான கோணத்தில் சறுக்கும் தன்மைகொண்டது. பிற (பறக்காத) மரவாழ் தவளைகள் 45°க்கு அதிகமான கோணத்தில் மட்டுமே வழுக்கிச் செல்லக்கூடியது. இம்முறைக்கு ”பாராசூட்டிங்” என்று குறிப்பிடப்படுகிறது.[1]

பறக்கும் அல்லது வழுக்கும் தன்மையானது பல தவளைகளில் (புது உலகு-கைலிடே, பைலோமெடுசிடே மற்றும் பழைய உலகு தவளைகளில்-ராக்கோபோரிடே) தனித்தனியாகத் தோன்றியது.[2][1] இந்த இணைப் பரிணாமம் இத்தவளைகளின் மரச்சூழல் வாழிட தகவமைப்பாகத் தோன்றியுள்ளது. தொல்லுலக தவளைகளில் நீளமான முன்கை மற்றும் பாதமும், விரல்களுக்கிடையே படலமும் காணப்படும். கரங்களில் பக்கவாட்டு தோல் மடிப்பு காணப்படும், தவளையின் நீளத்தினை கணக்கிடப்படும்போது எடை குறைந்து காணப்படுகிறது.[2] இத்தகைய புறத்தோற்ற உருவ மாறுபாடுகள் சறுக்கும் தன்மைக்கானவைகளாகும்.

ஆல்பிரடு அரசல் வாலேசு பறக்கும் தவளைகள் குறித்து அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். இது தவளைகளின் பறக்கும் செயல் குறித்த முதன்முதலாக எழுதப்பட்ட அறிக்கையாகும்.[3] இவர் கூறிய இனங்கள் பின்னர் ஜார்ஜ் ஆல்பர்ட் பவுலெங்கரால் ராகோபோரசு நிக்ரோபால்மடசு என்று விவரிக்கப்பட்டது.

பறக்கும் அல்லது வழுக்கும் தவளைகள் கீழ்க்கண்ட பேரினங்களில் கீழ் உள்ளன:

  • அகலிச்னிஸ் ( பிலோமெடுசிடே )
  • எக்னோமியோகைலா (ஹைலிடே)
  • பாலிபிடேட்சு (ராகோபோரிடே)
  • ராகோபோரசு (ராகோபோரிடே)
  • ஜாங்கிக்சலசு (ராகோபோரிடே)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Emerson, S.B., Travis, J., & Koehl, M.A.R. (1990). "Functional complexes and additivity in performance: A test case with 'flying' frogs." Evolution, 44(8), 2153-2157.
  2. 2.0 2.1 Emerson, S.B., & Koehl, M.A.R. (1990). "The interaction of behavioral and morphological change in the evolution of a novel locomotor type: 'Flying' frogs." Evolution, 44(8), 1931-1946.
  3. Oliver, J.A. (1951). "'Gliding' in amphibians and reptiles, with a remark on an arboreal adaptation in the lizard, Anolis carolinensis carolinesis Voigt." The American Naturalist, 85(822), 171-176.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_தவளை&oldid=3107564" இருந்து மீள்விக்கப்பட்டது