மலபார் மிளகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலபார் மிளகு (Malabar pepper) என்பது ஒரு வகையான கருப்பு மிளகு ஆகும். இது தற்போதைய கேரள மாநிலத்தில் நாற்றுகளாக உருவாக்கப்படுகிறது. மலபார் கடற்கரை பகுதிகளில் இந்த வகை மிளகு அதிகளவு உற்பத்தி ஆவாதல் மலபார் மிளகு என அழைக்கப்படுகிறது.‌ இந்த மிளகின் தனித்துவத்திற்காக புவிசார் குறியீடு கோரப்பட்டு, சனவரி 2008-ல் புவிசார் குறியீடு பெற்றது.[1][2] வேளாண் பொருட்கள் பிரிவில் மலபார் மிளகு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[3]

இதனை பண்டைய ரோமானிய மற்றும் அரேபிய வணிகர்கள் மிகவும் விரும்பினர். பின்னர் ஆரம்பகால ஐரோப்பிய கடற்படையினரால் விரும்பப்பட்டது.

வகைப்பாடு[தொகு]

மலபார் மிளகு இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சீரற்ற அல்லது ஒழுங்கற்ற வடிவம் மற்றும் சீரான அல்லது வழக்கமான வடிவம்.

சமச்சீரற்ற வகை கருப்பு நிறத்தில் உள்ளது மற்றும் வட்டமான மற்றும் குழிவான மேற்பரப்பு உள்ளது. சமங்கா வகையானது சுருக்கமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது மற்றும் அடர் பழுப்பு முதல் கருப்பு நிறத்தில் இருக்கும்.

புவிசார் குறியீடு தகவல்கள்[தொகு]

  • விண்ணப்ப எண் - 49[4]
  • விண்ணப்பதாரர் பெயர் - மசாலா வாரியம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்
  • தாக்கல் செய்த தேதி - 13/02/2006
  • பொருட்கள் - வேளாண்மை
  • புவியியல் பகுதி - இந்தியா (கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு)
  • சான்றிதழ் எண் - 47
  • சான்றிதழ் தேதி - 21/01/2008

மற்ற மசாலாப் பொருள்கள்[தொகு]

புவிசார் குறியீடு பெற்றுள்ள இந்தியாவின் பிற மசாலாப் பொருட்களின் பட்டியல் கீழே,.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ganguli, Ratna (31 மே, 2007). "Two Kerala pepper varieties to get GI tags" – via The Economic Times - The Times of India. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "4 ஆண்டுகளாக தாமதமாகும் புவிசார் குறியீடு : ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம் உட்பட 'காத்திருப்பு' பட்டியலில் 26 பொருட்கள்". இந்து தமிழ் திசை.
  3. "கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்". BBC News தமிழ். 24 ஜன., 2022. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Details | Geographical Indications | Intellectual Property India". search.ipindia.gov.in.
  5. "Three more spices got Geographical Indication". Directorate of Arecanut and Spices Development, Ministry of Agriculture, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_மிளகு&oldid=3856519" இலிருந்து மீள்விக்கப்பட்டது