குடகு பசுமை ஏலக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடகு பசுமை ஏலக்காய் (Coorg green cardamom) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலம் குடகு பகுதியில் வளர்க்கப்படும் ஏலக்காய் வகைகளுள் ஒன்றாகும்.[1]

சாகுபடி[தொகு]

கோடை மாதங்களில் பாசன நீர் கிடைக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சிறிய ஏலக்காயின் இயற்கையான வாழ்விடம் மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையான காடு ஆகும். ஆண்டு மழைப்பொழிவு 1500 முதல் 4000 மிமீ வரையும், வெப்பநிலை 10 முதல் 35 சென்டிகிரேடு வரையும் உள்ள கடல் மட்டத்திலிருந்து 800 முதல் 1200 மீ உயரமுடைய இடங்களில் சாகுபடி நடைபெறுகிறது. ஏலக்காய் பொதுவாக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த களிமண் மண்ணில் வளரும்.[2]

புவியியல் சார்ந்த உரிமைகள்[தொகு]

குடகு பசுமை ஏலக்காய் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு அல்லது புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) மதிப்பினை 2009ஆம் ஆண்டு பெற்றுள்ளது.[3]

பயன்பாடுகள்[தொகு]

ஏலக்காய் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இது இனிப்பு மற்றும் உப்பு சார்ந்த உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் விதைகளிலிருந்து வரும் எண்ணெய் சுவையான உணவுகள், ஊட்டச்சத்து பானம், ஒயின்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் குணப்படுத்தும் சக்தி காரணமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஈறு மற்றும் பல் தொற்று, செரிமான கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடகு_பசுமை_ஏலக்காய்&oldid=3444845" இருந்து மீள்விக்கப்பட்டது