ஆலப்புழா பசுமை ஏலக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலப்புழா பசுமை ஏலக்காய் (Alleppey Green Cardamom) என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் ஏலக்காய் மலைப்பகுதியில் வளர்க்கப்படும் பச்சை வகை உலர்ந்த ஏலக்காய் ஆகும்.

ஆலப்புழா ஏலக்காய் என்று அழைக்கப்படுவதற்கு இது ஆலப்புழாவில் விளைவது மட்டும் காரணமல்ல. மாறாக ஆலப்புழா முந்தைய திருவாங்கூரில் ஏலக்காய் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யும் முக்கியத் தளமாக இருந்தது.[1][1] 18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர்கள் ஏலக்காயின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் அரசின் ஏகபோகத்தைக் கொண்டிருந்தனர். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு, திருவிதாங்கூர்-டச்சுப் போர்களுடனான மன்னர்களுக்கிடையேயான புரிதல் , மார்த்தாண்டா வர்மரின் கீழ் பிரிட்டிஷ் உதவியுடன் அதிகாரத்தைப் பலப்படுத்துதல் போன்றவை இத்தகைய ஏகபோகம் வரக் காரணமாக இருந்தன. இது திருவிதாங்கூர் மாநிலத்தில் உள்ள ஏலக்காயின் அனைத்து பொருட்களும் ஆலப்புலாவியில் உள்ள மாநில மண்டி மூலம் மட்டுமே விற்கப்பட்டது. திருவாங்கூரில் ஆலப்புழா முக்கிய துறைமுகமாக இருந்தது. இது ஆலப்புழாவில் ஏலக்காய் தரம் பிரித்தல் பதப்படுத்துதல் செயலாக்கத்திற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக இப்பகுதியிலிருந்து மிக உயர்ந்த தரமாக உற்பத்தி செய்யப்பட்ட ஏலக்காய் ஆலப்புழா பசுமை ஏலக்காய் என்று பெயர் பெற்றது. கொச்சி சந்தை மற்றும் துறைமுகத்தின் எழுச்சி, ஆலப்புழா முக்கிய ஏற்றுமதி சந்தையாக மாறியது. சிறந்த செயலாக்க வசதிகள், ஏராளமான மூலப்பொருட்கள், திறமையான உழைப்பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு போன்றவற்றின் வளர்ச்சி, ஆலப்புழையினை முக்கிய சந்தைத் துறைமுகமாக மாற்றியது.

ஆலப்புழா ஏலக்காய் ஒரு தனித்துவமான தரமுடையது. இது சூளையில் உலர்த்தப்பட்டது. உயர்ந்த மனம், தரம், பச்சை நிறத்தின் சீரான தோற்றம் மற்றும் மூன்று மூலை ரிப்பட் தோற்றம் கொண்டது.

புவியியல் அறிகுறி உரிமைகள்[தொகு]

ஆலப்புழா பசுமை ஏலக்காய் 2005ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-21 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)