மலங்கரா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலங்கரா அணை
Morning view of Malankara Dam reservoir from Kudayathoor 2.jpg
நாடுஇந்தியா
அமைவிடம்இந்தியா, கேரளம், தொடுபுழா
புவியியல் ஆள்கூற்று9°51′10″N 76°44′41″E / 9.85278°N 76.74472°E / 9.85278; 76.74472ஆள்கூறுகள்: 9°51′10″N 76°44′41″E / 9.85278°N 76.74472°E / 9.85278; 76.74472
நிலைOperational
அணையும் வழிகாலும்
வகைGravity concrete

மலங்கரா அணை (Malankara Dam) என்பது நீர்ப்பாசன நோக்கங்களுக்காக கேரளத்தின், மூவாற்றுப்புழை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். மூலமட்டம் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீரைப் பயன்படுத்த இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டமானது மூவாட்டுபுழா பள்ளத்தாக்கு நீர்ப்பாசன திட்டத்தில் கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அணையினால் உருவான செயற்கை ஏரி சுமார் 11 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

சுற்றுலா[தொகு]

நீர்பாசன நோக்கத்திற்காக, மூவாட்டுபுழா ஆற்றின் துணை ஆறான தொடுபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. [1] [2] இந்த செயற்கை ஏரி தொடுபுழா - மூலமட்டம் சாலை (மாநில நெடுஞ்சாலை 33) [3] அருகில் 11 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் படகு மற்றும் மீன்பிடிக்க ஏற்றது. [4] இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணைக்கட்டு போன்றவையல்லாமல், மலங்கரா அணை ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும். அருகிலுள்ள 15 ஏக்கர் தீவை உள்ளடக்கிய நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. [5]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலங்கரா_அணை&oldid=3224094" இருந்து மீள்விக்கப்பட்டது