மர உலர் தாவரகம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மர உலர் தாவரகம்[சான்று தேவை] (Xylotheque அல்லது xylothek கிரேக்க மொழி: xylon "wood"; மரம் + theque: "repository"; பேணுமிடம்) என்பது உலர் தாவரகங்களின் வகைகளில் ஒன்றாகும். இதில் மரச் சான்று உருவகங்கள், தாவர ஆய்வுகளுக்காகப் பேணப்படுகின்றன.பாரம்பரிய மர உலர் தாவரகத்தின் ஆவணங்கள் புத்தக வடிவிலான தொகுதிகளின் வடிவத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு மர ஆவணமும், ஒரு குறிப்பிட்ட வகையான மரத்தாலும், தொடர்புடைய தாவரத்தின் வெவ்வேறு பகுதிகளின் மாதிரிகளுடனும் உருவாக்கப்படுகின்றன.
மர உலர் தாவரகம் என்பது மர வில்லையகம் (xylarium[1] கிரேக்கம் xylon "wood" இலத்தீன்: arium "separate place") என்றும் அழைக்கின்றனர். ஒப்பிட்டு அளவில் இது புதிய வடிவம் ஆகும். மேலும் மர ஆவணங்கள், சிறிய மரவில்லை, தனித்துவமான அம்மரத்தின் விவரங்களோடு செதுக்கப்படுகின்றன.
பல நாடுகள், இதுபோன்ற ஒரு மர உலர் தாவரகத்தையாவது தங்கள் நாட்டின் தாவர வளத்திற்காக பேணுகின்றன. பிற நாடுகளின் தாவர வளங்களைப் பேணும் பன்னாட்டு அமைப்புகளும் உள்ளன. இந்த ஆவணகம், காட்டியல், தாவரவியல், பாதுகாப்பு திட்ட ஆய்வாளர்கள், தடய அறிவியல், தொல்லுயிரியல், தொல்லியல், மர ஓவியங்களைப் பாதுகாக்கும் கலைஞர்கள் போன்றவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.
பன்னாட்டு மர உலர் தாவரகங்கள்
[தொகு]Xyloteque | Samples |
Xylarium Bogoriense, பொகோர் (இந்தோனேசியா) | 187,657[2] |
மேடிசன் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) | 98,000 |
Tervuren (பெல்ஜியம்) | 57,000[3] |
ஆம்பர்கு (ஜெர்மனி) | 37,000[4] |
RBG Kew (UK) | 34,000[5] |
Building Research Establishment (ஐக்கிய இராச்சியம்) | 30,000[6] |
சாவோ பாவுலோ (பிரேசில்) | 17,000[7] |
Beecroft (ஆத்திரேலியா) | 13,000[7] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கேரளா வன ஆய்வு நிலையம்
- ↑ "Ministry to name Bogor's Xylarium world's largest wood collection". The Jakarta Post.
- ↑ "Xylarium" Claude E. Phillips Herbarium, Delaware State University.
- ↑ "Service for Timber Trade Associations and Consumers". Thünen Institute.
- ↑ "Wood collection (xylarium)", Kew Royal Botanic Gardens.
- ↑ "11 things you didn't know about wood! - BRE Group". bregroup.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2016-08-01. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.
- ↑ 7.0 7.1 "FAO Forestry Paper 71". Food and Agriculture Organization of the United Nations, 1986.