உள்ளடக்கத்துக்குச் செல்

மர்லின் மேன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்லின் மேன்சன்
2024 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மர்லின் மேன்சன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரைன் ஹ்யூ வார்னர்
பிறப்புசனவரி 5, 1969 (1969-01-05) (அகவை 57)
கான்டன், ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • நடிகர்
  • ஓவையர்
  • எழுத்தாளர்
இசைத்துறையில்1989–தற்போது வரை
இணையதளம்marilynmanson.com
கையொப்பம்

மர்லின் மேன்சன் (Marilyn Manson) (பிறப்பு பிரைன் ஹ்யூ வார்னர் ; ஜனவரி 5, 1969) ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். இவர் தன்னுடைய முரண்பாடான மேடை அவதாரத்திற்காகவும் மர்லின் மேன்சன் என்ற பெயரைக்கொண்ட இசைக்குழுவின் முன்னணி பாடகர் என்ற தன்னுடைய பிம்பத்தாலும் பிரபலமானவராக இருக்கிறார். இவருடைய மேடைப் பெயர், நடிகையான மர்லின் மன்றோ மற்றும் தண்டனையளிக்கப்பட்ட கொலைகாரரான[1] சார்லஸ் மேன்சன் ஆகியோரின் பெயர்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.[2][3] இவர் மாதிரியாகக் கொள்ளும் அதிர்ச்சிகரமான பாணிகளுடனான இவருடைய தோற்றத்தோடு குழந்தைகளின் மீது மோசமான தாக்கமேற்படுத்துபவர் என்றும், இவருடைய பாடல் வரிகளை சூழ்ந்திருக்கும் முரண்பாடுகள் அனைத்தும் குறிப்பிடத்தகுந்த பொதுமக்களிடம் கவர்ச்சியை தூண்டியிருப்பதாக இவரைப் பற்றி ஊடகங்களில் நீண்டகாலமாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.[4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பிரையன் ஹக் வார்னர் ஜனவரி 5, 1969[5] அன்று ஓகையோ நகரத்தின், கேன்டனில் பிரைன் ஹ்யூ வார்னர் என்ற பெயரில் பார்ப் வயர் மற்றும் ஹ்யூ ஜாக் வார்னர் ஆகியோருக்கு ஒரே மகனாகப் பிறந்தார்.[6][7][8] இவருடைய தி லாங் ஹார்ட் ரோட் அவுட் ஆஃப் ஹெல் என்ற சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் தனது தந்தை வழியில் இவர் ஜெர்மன் மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவரார்.[9][10] இவருடைய தந்தை கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர், இவருடைய தாயார் எபிஸ்கோபேலியன்[11] என்பதோடு இவர் அவருடைய தாயாரின் மதத்திலேயே வளர்க்கப்பட்டிருக்கிறார்.[12][13] வார்னர் முதல் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்புவரை ஹெரிடேஜ் கிறிஸ்துவப் பள்ளியில் படித்தார். பின்னாளில் புளோரிடாவின், ஃபோர்ட் லாடர்டேல்லில் உள்ள கார்டினல் கிப்பன்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். மேன்சன் 1987ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார். 1990ஆம் ஆண்டில் புரோவார்ட் கம்யூனிட்டி கல்லூரியில் மாணவரானார். இவர் பத்திரிக்கையாளராவதற்கான பட்டப்படிப்பில் சேர்ந்தார்.[14] பின்னர், தெற்கு புளோரிடாவிற்கான 25வது பேரலல் என்ற வாழ்க்கைமுறை பத்திரிக்கைக்கு இசைக் கட்டுரைகளை எழுதி வந்தார்.[15]

இசை வாழ்க்கை

[தொகு]

1989 ஆம் ஆண்டில் கித்தார் கலைஞர் ஸ்காட் புட்ஸ்கி என்பவருடன் சேர்ந்துமேன்சன் அண்ட் தி ஸ்பூக்கி கிட்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கினார் (இந்தப் பெயர் மர்லின் மேன்சன் என்று 1992 ஆம் ஆண்டில் சுருக்கப்பட்டது).[16][17] இக்குழுவில் வார்னர் பாடல் வரிகளை எழுதினார். வார்னர் மர்லின் மேன்சன் என்ற மேடைப் பெயரை வைத்துக்கொண்டார். மேலும் சுழலும் இசைக்கலைஞர்களின் வரிசையுடன் சேர்ந்து, 1990 ஆம் ஆண்டில் இசைக்குழுவின் முதல் பாடலை மர்லின் மேன்சன் & தி ஸ்பூக்கி கிட்ஸ் என்ற பெயரில் பதிவு செய்தார்.[18]

அமெரிக்காவில் மட்டும், இசைக்குழுவின் மூன்று இசைத் தொகுப்பகள் பிளாட்டினம் மற்றும் மூன்று தங்க விருதுகளைப் பெற்றது. முதல் பத்து பட்டியலில் மூன்று அறிமுக வெளியீடுகளையும் கொண்டிருந்தது. மேன்சன் முதலில் ஜாக் ஆஃப் ஜில் இசைக்குழுவின் தயாரிப்பாளராகவே பணியாற்றினார். இந்த இசைக்குழு பெயர் பெறுவதற்கும் இசைக்குழுவின் முதலாவது பதிவுகளை தயாரிக்கவும் உதவினார். "மை கேட்" என்ற பாடலுக்கு கித்தார் இசைத்திருந்தார்.[19] மேன்சன் பின்னாளில் தொடக்ககால ஜாக் ஆஃப் ஜில்லின் பதிவுகளின் தொகுப்பான ஹூமிட் டீனேஜ் மீடியோகிரிட்டி 1992-1995 என்ற இசைக்குழுவின் தொகுப்பிற்கு பாடல் வரிகளை எழுதினார். டிஎம்எக்ஸின் இசைத் தொகுப்பான ஃபிளெஷ் ஆஃப் மை ஃபிளெஷ், பிளட் ஆஃப் மை பிளட் [20] மற்றும் காட்ஹெட்டின் 2000 இயர்ஸ் ஆஃப் ஹ்யூமன் எர்ரர் போன்றவற்றில் சிறப்பு விருந்தினராக மேன்சன் தோன்றியிருக்கிறார்.[21]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

[தொகு]

லாஸ்ட் ஹைவே என்ற டேவிட் லின்ச்சின் திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு மேன்சன் நடிகராக அறிமுகமானார். பின்னர், பல்வேறுவிதமான சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினார், பார்ட்டி மான்ஸ்டர் , பின்னாளில் தன்னுடைய காதலியான ரோஸ் மெக்காவனின் 1998 ஆம் ஆண்டு திரைப்படமான ஜா பிரேக்கர் ; ஆசியா அர்ஜெண்டினோவின் 2004 ஆம் ஆண்டு திரைப்படமான தி ஹார்ட் இஸ் டிசீட்புல் எபோ ஆல் திங்ஸ் ; ரைஸ்: பிளட் ஹன்டர், த ஹயர்: பீட் த டெவில்போன்றவை.

சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி என்ற படத்தில் வில்லி வோன்காவாக தனது நடிப்பிற்கான தாக்கமாக மேன்சனைப் பயன்படுத்திக்கொண்டதாக ஜானி டெப் குறிப்பிட்டிருக்கிறார். மேன்சனும்கூட இந்தத் திரைப்படத்தில் வில்லி வோன்காவாக நடிப்பதற்கான தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.[22]

ஓவியகலை

[தொகு]

2004 ஆம் ஆண்டு i-D என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 1999 ஆம் ஆண்டு ஐந்து நிமிட கருத்துத் துண்டுகளை உருவாக்கி அவற்றை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விற்றபோது, ​​நீர் வண்ண ஓவியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியதாக மேன்சன் கூறினார். செப்டம்பர் 13–14, 2002 அன்று, இவரது முதல் ஓவியக் கண்காட்சியான தி கோல்டன் ஏஜ் ஆஃப் க்ரோடெஸ்க், லாஸ் ஏஞ்சல்ஸ் கான்டெம்பரரி கலையரங்கத்த்தில் நடைபெற்றது.[23]

மேன்சன் தான் சுயமாக அறிவித்துக்கொண்ட இசை இயக்கத்திற்கு செலிபிரேட்டேரியன் கார்ப்பரேஷன் என்று ஒரு இயகத்பெயரிட்டார்.[24] இந்த இயக்கத்திற்காக "நாங்கள் எங்களுடைய நிழல்களை அதற்குள்ளாக நின்றுகொண்டிருப்பவர்களிடத்தில் விற்பனை செய்வோம்" என்ற ஒரு வாசகத்தையும் உருவாக்கினர்.[25]

தொண்டு பணிகள்

[தொகு]

மேன்சன் தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில், உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ரசிகருடன் இணைந்து பணியாற்ற மேக்-ஏ-விஷ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றினார். டென்னசியைச் சேர்ந்த 16 வயதான ஆண்ட்ரூ பெய்ன்ஸ் என்பவரது தி கோல்டன் ஏஜ் ஆஃப் க்ரோடெஸ்க் என்ற இசைத் தொகுப்பிற்கு பின்னணி குரல்களைப் பதிவு செய்ய முன்வந்தார்.[26][27] காங்கோ ஜனநாயகக் குடியரசில் வீட்டு மற்றும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பணம் திரட்டிய ஆக்ஸ்பாமின் 2013 "ரம்பிள் இன் தி ஜம்பிள்" நிகழ்வில் பங்களித்தார்.[28] குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் மற்றும் கல்வியைக் கற்க உதவும் மியூசிக் ஃபார் லைஃப் மற்றும் லிட்டில் கிட்ஸ் ராக் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இவர் ஆதரிவளித்துள்ளார். இவர் புராஜெக்ட் நைட்லைட் என்ற குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இது குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் உடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் பேச ஊக்குவிக்கிறது.[29]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சார்லஸ் மேன்சன் விசாரணை பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம், 2violent.com.
  2. Manson, Marilyn (1998). The Long Hard Road out of Hell. HarperCollins. pp. 85–87. ISBN 0-06-098746-4.
  3. "Biography for Marilyn Manson". Internet Movie Database. Retrieved 2008-01-12.
  4. "Fox News Marylin Manson Interview". YouTube. Retrieved 2008-01-12.
  5. "UPI Almanac for Saturday, Jan. 5, 2019". United Press International. January 5, 2019 இம் மூலத்தில் இருந்து January 5, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190105134420/https://www.upi.com/Top_News/2019/01/05/UPI-Almanac-for-Saturday-Jan-5-2019/9081546481545/. 
  6. "Marilyn Manson's Mother Dies After Battle With Dementia". Blabbermouth.net. May 18, 2014. Archived from the original on March 3, 2016. Retrieved January 16, 2015.
  7. "Brian Hugh Warner (b. 1969)". MooseRoots.com. Retrieved March 20, 2016.
  8. "Marilyn Manson shares heartfelt words after father's death". Alternative Press. July 8, 2017. Archived from the original on September 5, 2017. Retrieved July 9, 2017.
  9. "Ancestry of Marilyn Manson". Wargs.com. Archived from the original on December 2, 2010. Retrieved September 8, 2010.
  10. Manson, Marilyn (1998). The Long Hard Road out of Hell. HarperCollins. p. 17. ISBN 978-0-06-098746-6. An imposing-looking family tree tracing the Warners back to Poland and Germany, where they were called the Wanamakers, was plastered on the wall nearby.
  11. Grow, Kory (August 12, 2015). "See Marilyn Manson Play Native American Hit Man in Movie Trailer". Rolling Stone. Archived from the original on August 13, 2015. Retrieved August 13, 2015.
  12. DeCurtis, Anthony. "Marilyn Manson: The Beliefnet Interview". Beliefnet.com. Archived from the original on June 6, 2011. Retrieved September 8, 2010.
  13. "Marilyn Manson". Montreal Mirror. July 24, 1997. Archived from the original on June 6, 2011. Retrieved September 8, 2010.
  14. "25th Parallel". Spookykids.net. Archived from the original on January 18, 2010. Retrieved January 10, 2010.
  15. Harper, Janet (June 4, 2014). "THRILL KILL'S MUSIC TO DANCE, SLAY BY – Meet the guy who freaked out Marilyn Manson". Folio Weekly. Archived from the original on January 1, 2018. Retrieved January 1, 2018.
  16. Manson & Strauss 1998, ப. 64–65.
  17. Hamersly, Michael (February 4, 2008). "Interview with your vampire: Marilyn Manson". PopMatters. Archived from the original on June 14, 2016. Retrieved February 12, 2022.
  18. "Dangerous Creatures: Marilyn Manson have come for your Children". Guitar World. December, 1996. Archived from the original on 2007-06-04. Retrieved 2007-06-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  19. "Manson Resumes Tour Without Hole". MTV News. March 22, 1999. http://www.mtv.com/news/articles/1430051/19990322/hole.jhtml/. பார்த்த நாள்: 2007-06-18. 
  20. மேன்சன் டிஎம்எக் உடன் இணைகிறார் அக்டோபர் 23, 1998". ஜூன் 18, 2007ஆம் ஆண்டில் திரும்ப எடுக்கப்பட்டது.
  21. "Godhead Biography". MTV News. 1999-05-05. Retrieved 2007-06-18.
  22. http://www.scifimoviepage.com/art_charlie.html
  23. Smith, Dakota (January 24, 2000). "Shocker! Marilyn Manson Can Paint, Art Critics Say". VH1 News இம் மூலத்தில் இருந்து December 4, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071204203103/http://www.vh1.com/news/articles/620624/20000122/story.jhtml. 
  24. Harris, Chris (October 28, 2005). "Marilyn Manson Likens His New Guitar God to a Naked Woman". MTV News இம் மூலத்தில் இருந்து November 16, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071116185033/http://www.mtv.com/news/articles/1512539/20051028/marilyn_manson.jhtml?headlines=true. 
  25. Harris, Chris (2005-10-28). "Marilyn Manson Likens His New Guitar God To A Naked Woman". MTV News. http://www.mtv.com/news/articles/1512539/20051028/marilyn_manson.jhtml?headlines=true. பார்த்த நாள்: 2007-09-27. 
  26. "Marilyn Manson Makes Dying Fan's Wish Come True". Blabbermouth.net. August 29, 2002. Archived from the original on October 24, 2016. Retrieved October 23, 2016.
  27. "Marilyn Manson shows his softer side". Irish Examiner. August 31, 2002. Archived from the original on October 24, 2016. Retrieved October 23, 2016.
  28. "Marilyn Manson | Celebrities Donate Items To Charity Jumble Sale". Contactmusic.com. January 9, 2013. Archived from the original on October 24, 2016. Retrieved October 23, 2016.
  29. Gasparek, Brian (February 6, 2015). "25 Unexpected Facts About Marilyn Manson (Only One Of Which Involves Mario Kart)". The Huffington Post. AOL. Archived from the original on August 19, 2016. Retrieved October 23, 2016.

கூடுதல் ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்லின்_மேன்சன்&oldid=4392355" இலிருந்து மீள்விக்கப்பட்டது