உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா கிளேனொவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா கிளேனொவா
இயற்பெயர்Мари́я Васи́льевна Клёнова
மரியா வாசில்யவ்னா கிளேனொவா
பிறப்பு(1898-08-12)12 ஆகத்து 1898
இர்க்குஸ்க், உருசியப் பேரரசு
இறப்பு6 ஆகத்து 1976(1976-08-06) (அகவை 77)
மாஸ்கோ, சோவியத் யூனியன்
தேசியம்உருசியர் உருசியா, சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றியம்
துறைநிலவியல் (கடல்)
பணியிடங்கள்ஷர்சாவ் கடலியல் நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளர்
அறியப்படுவதுகடற்படுகை தரப்படமாக்கல்
குறிப்புகள்
உருசிய கடல் நிறுவனத்தின் நிறுவனர்

மரியா வாசில்யெவ்னா கிளேனொவா (உருசியம்: Мари́я Васи́льевна Клёнова) (Maria Vasilyevna Klenova,ஆகஸ்ட் 12, 1898 – ஆகஸ்ட் 6, 1976)[1] உருசியா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் நிலநூல் வல்லுநர் மற்றும் ரஷியக் கடல்சார் அறிவியல் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். மேலும் சோவியத் அண்டார்டிக் நிலப்படத்தொகுப்பு உருவாக்குவதில் பங்களித்த முதல் ரஷ்யரும் ஆவார்.[2]

கிளேனொவா பேராசிரியராக வேண்டும் எனும் விருப்பத்துடன் படித்தார். பின்னர் சோவியத் ஒன்றிய அறிவியல் கழகத்தின் அண்டார்டிக்கா ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் 1955-57 மேற்கொள்ளப்பட்ட முதல் சோவியத் அண்டார்டிக்கா ஆய்வுப்பயணத்தில் இணைந்து கோண்டர். மாக்குவாரீ தீவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தேசிய அண்டார்க்டிக் ஆய்வுப்பயணங்களில் (ANARE) இனைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அந்த நேரத்தில் அவர் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பனி படர்ந்த துருவப்பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டார். அண்டார்டிக்காவில் ஆய்வுக்குச் சென்ற முதல் உருசியப் பெண் விஞ்ஞானி கிளேனொவா ஆவார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

மரியா வாசில்யெவ்னா கிளேனொவா 1898 -இல் உருசியப் பேரரசின் இர்குஸ்க் என்ற இடத்தில் பிறந்தார். எக்கத்தரீன்பூர்க் என்ற இடத்தில் கல்வியைத் தொடங்கினார். பின்னர் முதலாம் உலகப்போரின் பொழுது ஒரு மருத்துவ படிப்பைத் தொடரவேண்டி இவர் மாஸ்கோ சென்றார். உருசிய உள்நாட்டுப் போரின் போது மருத்துவப் படிப்பினைத் தொடர சைபீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். 1920 இன் தொடக்கத்தில் மாஸ்கோ திரும்பிய கிளேனொவா கனிமவியல் படிக்கத்தொடங்கினார். 1924 இல் மாஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கனிமவியலில் பட்டம் பெற்றார். யாகொவ் சமாலியவ், விளாடிமிர் வெர்னட்ஸ்கி ஆகியோரின் மேற்பார்வையில் இவர் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.[3]

பணிகள்

[தொகு]

கிளேனொவா, 1925 இல் சோவியத் கப்பலான பெர்சூயிஸ் என்ற கப்பலில், சோவியத் ஒன்றியத்துக்கு அப்பாலான தனது கடல்சார் புவியியல் ஆய்வுப்பணியினைத் தொடங்கினார். இந்த ஆய்வுக் கப்பலானது மிதக்கும் கடல்சார் ஆய்வு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. (தற்பொழுது இத்துறை நிக்கொலாய் எம்.கினிபோவிச் கடல்மீன்வள மற்றும் கடல்சார்வழி துருவ ஆய்வு நிறுவனம் என அழைக்கப்படுகிறது) பேரன்ட்ஸ் கடல், நொவாயா செமிலியாவின் தீவுக்கூட்டம், ஸ்பிட்ஸ்பெர்கன், பிரான்ஸ் ஜோசம் லேண்ட் ஆகிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயணத்தில் 1993 ஆம் ஆண்டு கிளேனொவா பேரண்ட் கடலின் கடல்படுகையின் வரைபடத்தை வரைந்து முடித்தார். அங்கு ஒரு புதிய சமவெளியைக் கண்டறிந்தார். அந்தப் பகுதிக்கு பேரண்ட் கடல் சமவெளி (85ºவ, 40ºகி) எனப்பெயரிட்டார். 1597 இல் தனது கடல்சார் ஆய்வுப்பயணத்தில் வடகிழக்கு வழியாகச் செல்லும்போது இறந்த டச்சுநாட்டின் துருவ ஆய்வாளர் வில்லியம் பேரண்ட் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. 1949 களில் சோவியத் ஒன்றிய அறிவியல் அகாதமியின் ஷர்சாவ் கடலியல் நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இது அட்லாண்டிக் கடல், அந்தாட்டிக்கா, காஸ்பியன் கடல், பேரன்ட்ஸ் கடல், வெள்ளைக் கடல் ஆகிய பகுதிகளில் கடல்சார் ஆய்வுகளை உள்ளடக்கிய பணியாகும்.

1956 இல் தென் திசைச் சார்ந்த , அந்தார்டிகாவில் கடற்கரையில் கணக்கெடுக்கப்படாத பகுதிகளை ஆய்வு செய்யவேண்டி, சோவியத் கடல்சார் ஆய்வுக்குழுவுடன் பயணம் மேற்கொண்டார். கிளேனொவா பள்ளத்தாக்கு என்றழைக்கப்பட்ட ஒரு பள்ளத்தாக்கு ஆய்வுக்குழுவினரால் 1981-1983 களில், கண்டுபிடிக்கப்பட்டு இவர் மறைவுக்குப் பிறகு இப்பெயர் சூட்டப்பட்டது.[2] பிரேசிலில் சால்வடாருக்குக் கிழக்கே கடலில் அமைந்துள்ள கிளேனொவா கடல்மலை 450 கி.மீ., வீனஸ் எரிமலையின் எரிமலைவாய்ப்பகுதி (வீனசின் கிளேனொவா எரிமலை வாய்ப்பகுதி, அண்டார்டிகாவில் கிளேனொவா சிகரம் ஆகியவை இவரைக் கௌரவப்படுத்தும் விதமாகச் சூட்டிய பெயர்களாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Биография Мария Клёнова". www.peoples.ru. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. 2.0 2.1 "Sixteenth Meeting of the GEBCO Subcommittee on Undersea Feature Names" (PDF). International Hydrographic Organization. April 2002. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  3. Ilic, Melanie (ed) (2017). Kalemeneva, E. and Lajus, J. "Soviet Female Experts in the Polar Regions" in The Palgrave Handbook of Women and Gender in Twentieth-Century Russia and the Soviet Union. Palgrave. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137549051. {{cite book}}: |first= has generic name (help)
  4. Klenova Peak. SCAR Composite Gazetteer of Antarctica

மேலும் வாசிக்க

[தொகு]
  • Klenova M.V. and Jastrebova L.A. (1938) Chlorophyll in sediments as an indication of the gas phase of the water. Trans. Inst. Mar. Fisheries, U.S.S.R. 5, 65-70.
  • Klenova, M.V. (1939) "Toward the Study of the Nature of the North Caspian Shore Line (Observations from an Airplane)." Nature no. 1 pp. 72–73 (in Russian).
  • Klenova, M.V. Geology of the Sea (Moscow, 1948), p. 424. (In Russian)
  • Geology of the Volga delta (1951, co-author)
  • Geology of the Barents Sea (Moscow, 1960) (In Russian)
  • Geological structure of the continental slope Caspian Sea (1962, co-author)
  • Precipitation of the Arctic basin based on drift l / s G. Sedov (1962)
  • Geology of the Atlantic Ocean (Moscow, 1975) (In Russian)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_கிளேனொவா&oldid=2700106" இலிருந்து மீள்விக்கப்பட்டது