உள்ளடக்கத்துக்குச் செல்

மன் மோகன் சிங் குஜ்ரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன் மோகன் சிங் குஜ்ரால் (Man Mohan Singh Gujral) (1919-12 செப்டம்பர் 2015) இந்திய நீதிபதியும் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியும் ஆவார்.

தொழில்[தொகு]

நீதிபதி குஜ்ரால் அம்பாலா, சண்டிகர், சிம்லா மற்றும் ரோத்தக் ஆகிய இடங்களில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். இவர் கூட்டு பஞ்சாப்பின் சட்ட நினைவூட்டுபவராகவும் இருந்தார். 1965ஆம் ஆண்டில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதியாக பதவிவகித்துள்ளார்.[1] 21 ஆகத்து 1969 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 1976 மே 7 அன்று இவர் இடமாற்றம் செய்யப்பட்டு சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆனார். நீதிபதி குஜ்ரால் 1983 மார்ச் 15 அன்று ஓய்வு பெற்றார். குஜ்ரால் தனது 96 வயதில் (2015ஆம் ஆண்டு) காலமானார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "South Andaman". பார்க்கப்பட்ட நாள் October 26, 2018.
  2. "Justice Man Mohan Singh Gujral dead". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் October 26, 2018.
  3. "Mr.Manmohan Singh Gujral". பார்க்கப்பட்ட நாள் October 26, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்_மோகன்_சிங்_குஜ்ரால்&oldid=3968104" இலிருந்து மீள்விக்கப்பட்டது