மனோகர் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரரசர் சகாங்கீர் இளவரசர் குர்ராமின் எடையிடும் மனோகர் தாசு, பிரித்தானிய அருங்காட்சியகம், 1610-1615. கீழே வலதுபுறத்தில் ஒரு சுய உருவப்படம் உள்ளது.

மனோகர் தாசு (Manohar Das) 1582-1624 ஆம் ஆண்டுகள் காலத்தில் முகலாயர் பாணியில் ஓவியம் தீட்டிய ஓர் இந்து ஓவியர் ஆவார். மனோகர் அல்லது மனுகர் என்ற பெயராலும் இவர் அறியப்பட்டார்.

மனோகரின் தந்தை பசவன், மனோகர் வளர்ந்த முகலாயப் பேரரசரின் அரசவையில் தலைமை ஓவியராக இருந்தார். தந்தை இவருக்கு ஓவியக்கலையை பற்றி இவருக்கு அறிவுறுத்தியிருக்கலாம், பின்னர் மனோகர் அரசவை ஓவியராகவும் ஆனார். இவரது ஆரம்பகால படைப்புகள் அக்பருக்காக வரையப்பட்டன, பின்னர் இவர் அக்பரின் மகனும் வாரிசுமான சகாங்கீருக்காக வரைந்தார், மனோகரின் படைப்புகள் அரச குடும்பங்களையும் அரசவை வாழ்க்கையையும் பெரும்பாலும் சித்தரித்தன. மனோகர் தாசின் சில படைப்புகளை பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்டு அருங்காட்சியகங்களில் காணலாம்.

1610 ஆம் ஆண்டு தட்டா மாகாணத்தில் உள்ள தர்கான் நீதிமன்றத்தில் முகலாய ஓவியரான மனோகர் உருவாக்கிய மிர்சா ஜானியின் மகன் மிர்சா காச்சியின் தோற்றம்"[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Museum, Victoria and Albert. "Mirza Ghazi Manohar V&A Explore The Collections". Victoria and Albert Museum: Explore the Collections (in ஆங்கிலம்).

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோகர்_தாசு&oldid=3756859" இலிருந்து மீள்விக்கப்பட்டது