மந்திர மலை
Appearance
இந்து தொன்மவியலின் அடிப்படையில் மந்திர மலை என்பது தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட மலையாகும். அவ்வாறு பாற்கடலை கடையும் போது, மந்திர மலை பாற்கடலுக்குள் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை அவதாரம் கொண்டு தாங்கியதாகவும், ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி எனும் பாம்பைக் கயிறாக பயன்படுத்தியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இம்மலைக்கு மந்திரகிரி என்ற பெயரும் உண்டு.