மந்திப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ParaHoxozoa
மந்திப் புறா
Mountain Imperial Pigeon Mahananda Wildlife Sanctuary West Bengal India 09.05.2016.jpg
Ducula badia insignis from Mahananda Wildlife Sanctuary, West Bengal, இந்தியா
உயிரியல் வகைப்பாடு e
Phylum: முதுகுநாணி
Class: பறவை
Order: புறா
Family: புறா
Genus: Ducula
இனம்: D. badia
இருசொற் பெயரீடு
Ducula badia
(Raffles, 1822)

மந்திப் புறா தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.

பெயர்கள்[தொகு]

தமிழில் :மந்திப் புறா

ஆங்கிலப்பெயர் :Mountain Imperial – Pigeon

அறிவியல் பெயர் :Ducula badia [2]

Subspecies insignis

உடலமைப்பு[தொகு]

43 செ.மீ. - ஆலிவ் பழுப்பு நிறங் கொண்ட உடலும் வெளிர்சாம்பல் நிறத்தலையும் மார்பும் கொண்டது.

காணப்படும் பகுதிகள்[தொகு]

வடகிழக்கு இந்தியாவின் மலைப் பகுதிகளிலும் தென்மேற்கு இந்தியாவின் மலைப் பகுதிகளும் மட்டுமே காணப்படும் இது இந்தியாவின் இடைப்பட்ட பகுதிகளில் காணப்படுவதில்லை. மேற்குத் தமிழ்நாட்டில் மலைத்தொடர் சார்ந்த பசுங்காடுகளில் 2000 மீ. ஊயரம் வரை காணலாம்.

உணவு[தொகு]

15 முதல் 20 வரையான குழுவாகப் பெரிய மரங்களில் இலை தழைகளிடையே மறைந்து இரை தேடும். பழங்களையே முக்கிய உணவாகக் கொள்ளும் இது சாதிக்காயை முழுவதுமாக அப்படியே விழுங்கும் பழக்க முடையது. காலையிலும் பிற்பகலிலும் உயரக்கிளைகளில் அமர்ந்து வெயில் காயும் இது இருட்டுவதற்கு முன்பே அடையும் இடம் செல்லும். கஉயுக்கோ க்உயூக்கோ என குரல் கொடுக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

ஜனவரி முதல் மே வரை சிறிய மங்களிலும் அவற்றில் சுற்றி வளர்ந்திருக்கும் பெரிய கொடிகளிடையும் கூடமைத்து ஒரு முட்டையிடும். [3]

படங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ducula badia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "மந்திப் புறாMountain Imperial – Pigeon". பார்த்த நாள் 8 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:66
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திப்_புறா&oldid=2749290" இருந்து மீள்விக்கப்பட்டது