மதுரை சொக்கநாதர் உலா
Appearance
மதுரை சொக்கநாதர் உலா [1] என்னும் இந்த நூலை மதுரை உலா எனவும் வழங்குவர். [2] இதனை இயற்றியவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புராணத் திருமலை நாதர். உலா இலக்கியங்களில் இது பொதியதொரு மரபினைப் பின்பற்றிப் பாடப்பட்டுள்ளது. உலா என்னும் சிற்றிலக்கியம் பொதுவாக உலாவரும் பாட்டுடைத் தலைவனை ஏழு பருவ-மகளிர் கண்டு காதல் கொள்வதாகப் பாடப்படும். இந்த உலாநூல் மதுரை சொக்கநாதர் ஏழு நாள் ஏழு வகையான ஊர்திகளில் உலா வந்ததாகப் பாடுகிறது.
- முதல் நாள் - தேர்
- இரண்டாம் நான் - வெள்ளை யானை
- மூன்றாம் நாள் - வேதக்குதிரை
- நான்காம் நாள் - இடப-வாகனம்
- ஐந்தாம் நாள் - தரும-ரிஷபம்
- ஆறாம் நாள் - கற்பக விருட்சம்
- ஏழாம் நாள் - சித்திர விமானம்
இந்த நூல் 376 கண்ணிகளைக் கொண்டதாய்க் கலிவெண்பா யாப்பில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் வீரமாறன் காலத்தில் இயற்றப்பண்ணது. இந்த நூல் தோன்றிய காலத்தில் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் தோன்றவில்லை. எனினும் அதில் கூறப்பட்டுள்ள இறைவன் சொக்கநாதரின் 64 திருவிளையாடல்கள் இந்த உலாவில் முறைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளன.
பாடல் - எடுத்துக்காட்டு
[தொகு]- - நறை கமழும்
- வான் பாயும் சோலை வயல் செந்நெல் கன்னலுக்குத்
- தேன் பாயும் பாண்டித் திருநாடன் - தான் பாடல்
- தங்கும் மறை ஓசை சங்கத் தமிழ் ஓசை
- பொங்கும் மதுராபுரி வேந்தன்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ உ. வே. சாமிநாதையர் பதிப்பு 1931, பின்னும் பலமுறை
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 221.
{{cite book}}
: Check date values in:|year=
(help)