மதுரன் இலை மூக்கு வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரன் இலை மூக்கு வெளவால்
Maduran leaf-nosed bat
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைராப்பிடிரா
குடும்பம்:
ஹிப்போசிடெரிடே
பேரினம்:
ஹிப்போசிடெரோசு
இனம்:
ஹி. மதுரே
இருசொற் பெயரீடு
ஹிப்போசிடெரோசு மதுரே
கிட்சென்னர் & மேரியண்டோ, 1993
மதுரன் இலை மூக்கு வெளவால் சரகம்

மதுரன் இலை மூக்கு வெளவால் (Maduran leaf-nosed bat)(ஹிப்போசிடெரோசு மதுரே) என்பது ஹிப்போடிடெரிடே வெளவால் குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படுகிறது. இந்த இனம் ஜாவாவின் கிழக்குப் பகுதியிலும் மதுரா தீவிலும் காணப்படுகிறது. இவை சுமார் 1,000 மீட்டர்கள் (3,300 அடி) கீழே காணப்படுகிறது. இது ஒரு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்ம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

வகைபாட்டியலும் சொற்பிறப்பியலும்[தொகு]

இந்த வெளவாலினை 1993ல் கிட்ச்னரும் மேரியாண்டோவும் புதிய சிற்றினமாக விவரித்தனர். இந்த சிற்றினத்தின் ”மதுரே” என்னும் பெயர் இந்த இனத்தின் ஒற்றை மாதிரி சேகரிக்கப்பட்ட மதுரா தீவு நினைவாக இடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hutson, A.M.; Schlitter, D.; Kingston, T.; Maryanto, I. (2008). "Hipposideros madurae". The IUCN Red List of Threatened Species 2008: e.T10147A3174803. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T10147A3174803.en. 
  2. Kitchener, D. J.; Maryanto, I. (1993). "Taxonomic reappraisal of the Hipposideros larvatus species complex (Chiroptera: Hipposideridae) in the Greater and Lesser Sunda Islands, Indonesia". Records of the Western Australian Museum 16 (2): 119–173. http://museum.wa.gov.au/sites/default/files/TAXONOMIC%20REAPPRAISAL%20OF%20THE%20HIPPOSIDEROS%20LARVATUS%20SPECIES%20COMPLEX%20(CHIROPTERA%20HIPPOSIDERIDAE)%20IN%20THE%20GREATER%20AND%20LESSER%20SU.pdf.