மதீனா மாகாணம் (சவுதி அரேபியா)
மதீனா பிராந்தியம் | |
---|---|
பிராந்தியம் | |
ٱلْمَدِيْنَة ٱلْمُنَوَّرَة | |
![]() மதீனாவில் அல்-மஸ்ஜித் அந்-நபவி பள்ளிவாசல், 2016 | |
![]() மதீனாவுடன் சவுதி அரேபியாவில் மதீனாவின் அமைவிடம் | |
Country | ![]() |
தலைநகரம் | மதீனா |
மாநகராட்சிகள் | 7 |
அரசு | |
• ஆளுநர் | பைசல் பின் சல்மான் |
• துணை ஆளுநர் | சவுத் பின் காலித் அல் சவுத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,51,990 km2 (58,680 sq mi) |
மக்கள்தொகை (2017 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 21,32,679 |
• அடர்த்தி | 14/km2 (36/sq mi) |
ISO 3166-2 | 03 |
மதீனா மாகாணம் (Medina Province, அரபு மொழி: مِنْطَقَة ٱلْمَدِيْنَة ٱلْمُنَوَّرَة, romanized: Minṭaqat Al-Madīnah Al-Munawarah ) என்பது சவூதி அரேபியாவின் ஹெஜாஸ் பிரதேசத்தில் அமைந்த ஒரு மாகாணம் (மினாக்கா ) ஆகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில், செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 151,990 கிமீ² ஆகும். இதன் மக்கள் தொகையானது 2,132,679 (2017 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும். [1] இந்த மாகாணமானது ஏழு முசாஃபாத் (கவர்னரேட்டுகள்) எனப் பிரிக்கப்பட்டுள்ளது:
கவர்னரேட் | மக்கள் தொகை |
மதீனா | 995,619 |
அல் ஹுனக்கியா | 52,549 |
மஹத் அல் தஹாப் | 53,687 |
அல்-உலா | 57,495 |
பத்ர் | 58,088 |
கைபர் | 45,489 |
யான்பு அல் பஹார் | 249,797 |
பிராந்தியத் தலைநகரமாக மதீனா உள்ளது. இது இஸ்லாத்தின் இரண்டாவது புனிதமான நகரம் ஆகும். [2] மாகாணத்தின் பிற நகரங்களாக யான்புல் அல் பஹ்ர் மற்றும் பத்ர் ஹுனைன் ஆகியவை உள்ளன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மடேன் சலேவும் இதில் உள்ளது. [3]
மக்கள் தொகை[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி | ||
---|---|---|
ஆண்டு | ம.தொ. | %± |
1992 | 1,084,947 | — |
2004 | 1,512,724 | 0.02% |
2010 | 1,781,733 | 0.01% |
2018 | 2,188,138 | 0.01% |
source:[4] |
ஆளுநர்கள்[தொகு]
- முஹம்மது பின் அப்துல்அஜிஸ் (1926-1965) [5]
- அப்துல் முஹ்சின் பின் அப்துல்அஸிஸ் (1965-1985) [சான்று தேவை]
- அப்துல் மஜீத் பின் அப்துல்அஜிஸ் (1986-1999) [சான்று தேவை]
- முக்ரின் பின் அப்துல்அஸிஸ் (1999-2005) [சான்று தேவை]
- அப்துல்ஸீஸ் பின் மஜித் (2005-2013) [6]
- பைசல் பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் (2013 - தற்போது வரை) [சான்று தேவை]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Population Characteristics surveys" (PDF). General Authority for Statistics (Saudi Arabia). 2017.
- ↑ "Medina". Trawell Guide. 14 April 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "USESCO and Saudi Arabia: A Snapshot Picture" (PDF). UNESCO. 2012-11-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Saudi Arabia: Regions and Cities
- ↑ "Appendix 6. The Sons of Abdulaziz" (PDF). Springer. 13 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Governor of Madinah Province Receives UN Under-Secretary-General - gcc_press". Gulf in the Media. http://www.gulfinthemedia.com/index.php?m=gcc_press&id=2243672&cnt=171&lang=en&PHPSESSID=8. பார்த்த நாள்: 25 August 2012.