உள்ளடக்கத்துக்குச் செல்

மணக்காடு, திருவனந்தபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணக்காடு என்பது இந்தியாவில் கேரளா மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தின் மையப்பகுதியாகும்.  இந்த இடம் கமலேசுவரம் மற்றும் அட்டகுளங்கரை கிழக்குக் கோட்டை - கோவளம் சாலை இடையே அமைந்துள்ளது. இங்கு ஐக்கிய அரபு அமீரக தூதரகமும் அமைைந்துள்ளது.[1][2].[3][4] [ மேற்கோள் தேவை ]

அமைவிடம்

[தொகு]

மணக்காடு என்பது நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியாகும்.

கிழக்குக் கோட்டை பகுதியில் இருந்து மணக்காடு வழியாக கோவளம் கடற்கரைக்கு தனியார் மற்றும் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் செல்கின்றன.

மணக்காட்டிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 47 ம், சுமார் 1.5 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையமும், சுமார் 4 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த இடம் கில்லிப்பாலம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தியதன் மூலம் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது, இந்த சாலை அட்டகுளங்கரை சந்திப்பில் முடிவடைகிறது, இது மணக்காடு சந்திப்பிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது.

கிழக்கு கோட்டையில் இருந்து திருவல்லம் செல்லும் வழியில் மணக்காடு ஒரு முக்கிய குடியிருப்பு பகுதியாகும்.

மணக்காடு கோட்டையின் தென்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவிலும், கரமனையிலிருந்து தென்மேற்கில் சுமார் 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

முக்கிய வழிபாட்டுத் தளங்கள்

[தொகு]

இந்து, இசுலாம் மற்றும் கிருத்தவ மதத்தினரும் உள்ள பகுதியாகும்.

இப்பகுதியில் மணக்காடு தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இதன் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும், புகழ்பெற்ற 'ஆற்றுக்கால் பகவதி அம்மனின் பொங்கல் திருவிழாவுக்கு' அடுத்த நாளில் தேவி அவளுடைய சகோதரனான தர்ம சாஸ்தாவை காண வருவவதாக நம்பப்படுகிறது. [5] மணக்காடு வல்லயப் பள்ளி மற்றும் மத்திய ஜுமா மஸ்ஜித் (தைக்கா பள்ளி) இங்குள்ள புகழ்பெற்ற மசூதிகள் ஆகும்.[6]

இருங்குளங்கரை துர்கா தேவி கோவில் மற்றும் முக்கோலக்கல் பகவதி கோயில் ஆகியவை மணக்காட்டில் உள்ள இரண்டு முக்கிய இந்து கோவில்கள் ஆகும்.

சகாய மாதா தேவாலயமும்,ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது.[7]

குதிரை மாளிகை அரண்மனை அருங்காட்சியகம், சிறீ பத்மநாபசுவாமி கோவில், சிறீவராகம் கோவில், பழவங்காடி கணபதி கோயில், , ஆற்றுக்கால் பகவதி கோவில், கொஞ்சிராவிளை தேவி கோயில் மற்றும் பூசைப்புறை மண்டபம் ஆகியவை மணக்காட்டை சுற்றி சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

2000 ஆண்டு பழமையான திருவல்லம் சிறீ பரசுராம சுவாமி கோவில் உள்ள திருவல்லம் மணக்காட்டில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது.

மற்ற இடங்கள்

[தொகு]

சிறீ உத்திராடம் திருநாள் தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையும், பல ஆண்டுகளாக ஜென்சா மருத்துவமனை மற்றும் கார்த்திகைத் திருநாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியும் இங்கு உள்ளது.

75 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையான பெண்கள் உயர்நிலைப்பள்ளி இருப்பதால், இந்த பகுதி மணக்காடு பெண்கள் உயர்நிலைப்பள்ளி சந்திப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Postal Civil Division, Manacaud, Trivandrum". indiapost.gov.in. Retrieved 2024-09-26.
  2. "UAE consulate in Kerala". mofe.gov.ae. Retrieved 2024-09-26.
  3. https://www.uaeexchangeindia.com/trivandrum-manacaud/
  4. https://www.consulate-info.com/consulate/26753/United-Arab-Emirates-in-Kerala
  5. கின்னஸ் சாதனை
  6. மசூதி
  7. தேவாலயம்