மஞ்சூரியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சூரியா என்பது கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஒரு பகுதியாகும். மஞ்சூரியாவிற்கு இரண்டு விதமான வரையறைகள் உள்ளன. சீனாவிற்குள் இருக்கும் மஞ்சூரியா ஒன்று. மற்றொன்று வடகிழக்கு சீனா மற்றும் உருசிய தூர கிழக்கு ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ள பெரிய பகுதி. இரண்டாவது பெரிய பகுதியை குறிப்பிடுவதற்காக உருசியாவில் உள்ள மஞ்சூரியா வெளி மஞ்சூரியா என்றும் சீனாவில் உள்ள மஞ்சூரியா உள் மஞ்சூரியா என்றும் அழைக்கப்படுகிறது.

மஞ்சூரியா மஞ்சு மக்களின் தாயகமாகும்.[1] மஞ்சு என்ற பெயரை பிற்கால சிங் அரச மரபின் கான் கொங் தைசி 1636ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். சுரசன் மக்களை குறிப்பிடுவதற்காக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. சுரசன் மக்கள் ஒரு துங்குசிக் மக்களாவர். பதினேழாம் நூற்றாண்டு சீனாவை இந்த மஞ்சு மக்கள் கைப்பற்றினர். 1912 ஆம் ஆண்டு வரை நீடித்த சிங் அரசமரபை நிறுவினர்.

மக்கள் தொகையானது. 1750ஆம் ஆண்டில் 10,00,000 என்றும், 1850ஆம் ஆண்டில் 50,00,000 என்றும், 1900ஆம் ஆண்டில் 1.40 கோடி என்றும் பெருகியது. இதற்கு முக்கிய காரணம் சீன விவசாயிகள் அப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது ஆகும்.

சீனா, ஜப்பான் மற்றும் உருசியா நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே மஞ்சூரியா ஒரு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய இடமாக இருந்து வருகிறது. 1860ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒப்பந்தத்தின்படி. உருசியப் பேரரசானது மஞ்சூரியாவின் வடக்குப் பகுதி மீது ஆதிக்கத்தை நிறுவியது. தனது கட்டுப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதற்காக சீன கிழக்கு ரயில் அமைப்பை உருசியா உருவாக்கியது. மஞ்சூரியா மற்றும் கொரியா மீதான பிரச்சனைகள் காரணமாக உருசியாவுக்கும் ஜப்பானுக்கும் 1904-1905இல் போர் ஏற்பட்டது. 1931இல் ஜப்பானியர்கள் மஞ்சூரியா மீது படையெடுத்தனர். தங்களது கைப்பாவை அரசாகிய மஞ்சுகோ அரசை நிறுவினர். வேகமாக வளர்ந்து வந்த ஜப்பானிய பேரரசின் மையமாக மஞ்சுகோ உருவானது. ஆகஸ்ட் 1945இல் சோவியத் மஞ்சூரியா மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஜப்பானிய ஆட்சியானது உடனடியாக வீழ்ச்சியடைந்தது. உள் மஞ்சூரியாவில் சீன ஆட்சியை சோவியத்துகள் மீண்டும் நிறுவினர். சீன உள்நாட்டுப் போரில் மாவோவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் மைய நடவடிக்கைகளுக்கு மஞ்சூரியா அடிப்படையான பகுதியாக விளங்கியது. இதன் காரணமாக 1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு உருவானது. 1950-1953 நடைபெற்ற கொரிய போரில் ஐக்கிய நாடுகள் படைக்கு எதிராக வட கொரியாவிற்கு உதவுவதற்காக மஞ்சூரியா வை அடிப்படை பகுதியாக சீன படைகள் பயன்படுத்தின. சீன சோவியத் பிரிவிற்கு பிறகு மஞ்சூரியா பிரச்சினைக்குரிய பகுதியாக உருவானது. 1969ஆம் ஆண்டு சீனா சோவியத் எல்லை பிரச்சனை உருவானது. 2004ஆம் ஆண்டே சீன உருசிய எல்லை பிரச்சனையானது தூதரக ரீதியாக தீர்த்துக் கொள்ளப்பட்டது.

உசாத்துணை.[தொகு]

  1. Shanley (2008), ப. 144.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சூரியாவின்_வரலாறு&oldid=3349682" இலிருந்து மீள்விக்கப்பட்டது