மஞ்சு ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு ராணி
தனிநபர் தகவல்
குடியுரிமைஇந்தியா
பிறப்பு26 அக்டோபர் 1999 (1999-10-26) (அகவை 24)
ரோத்தக், அரியானா
விளையாட்டு
விளையாட்டுகுத்துச்சண்டை
பதக்கத் தகவல்கள்
மகளிர் குத்துச்சண்டை
நாடு  இந்தியா
உலக குத்துச்சண்டை போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 உளன்-ஊடே 48 கிலோ

மஞ்சு ராணி (பிறப்பு: 26 அக்டோபர் 1999) இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஓர் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 2019 உலக மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டு பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும், 2017 ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.

பின்னணி[தொகு]

அரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள ரிதல் போகட் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி. எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியாக இருந்த இவரது தந்தை 2010 இல் புற்றுநோயால் இறந்தார்.[1] ராணி ஆரம்பத்தில் கபடி விளையாடத் தொடங்கினார், ஆனால் இவரது பயிற்சியாளர் குத்துச்சண்டைக்கு மாறுமாறு அறிவுறுத்தினார். 2012 லண்டன் கோடைகால ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்ற ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, ராணி குத்துச்சண்டைக்கு மாறினார்.[2][1]

விளையாட்டு[தொகு]

ராணி 2017 ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.[3] இவர் 2019 ஆம் ஆண்டு பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் பிலிப்பைன்ஸின் சோசி கபுகோவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4] மேலும் இவர் 2019 உலக மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இலகு ரக எடைப்பிரிவில் (லைட் ப்ளைவெயிட்) இறுதிப் போட்டியில் இரசியாவின் எகடெரினா பால்ட்சேவாவிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[5][6][7]

2019 ஆம் ஆண்டில், ராணி விளையாட்டு மேலாண்மை நிறுவனமான இன்பினிட்டி ஆப்டிமல் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்துடன் கையெழுத்திட்டார்.[8] இந்த நிறுவனமானது இவரது ஒப்புதல்கள் மற்றும் வணிக நலன்களைக் கையாளும். நவம்பர் 2020 இல், ஒப்பந்தத்தை நிறைவேற்றாததற்காக அதே நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக ராணி அறிவித்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 PTI. "Manju Rani settles for silver at Women's World Boxing Championships". Sportsar. https://sportstar.thehindu.com/boxing/manju-rani-settles-for-silver-on-debut-at-womens-world-boxing-championships/article29672495.ece. 
  2. "Manju Rani". BBC News. https://www.bbc.com/hindi/sport-55864620. 
  3. Noronha, Karen (17 October 2019). "'Will do everything to change colour to gold,' says World boxing Champion silver medalist Manju Rani" (in en). DNA India. https://www.dnaindia.com/sports/report-will-do-everything-to-change-colour-to-gold-says-world-boxing-champion-silver-medalist-manju-rani-2797368. 
  4. Kulkarni, Abhijeet (20 February 2019). "Silver medal on debut: How boxer Manju Rani punched her way to the podium at Strandja Memorial". Scroll.in. https://scroll.in/field/913953/silver-medal-on-debut-how-boxer-manju-rani-punched-her-way-to-the-podium-at-strandja-memorial. 
  5. PTI (13 October 2019). "Manju Rani ends phenomenal world run with silver". https://www.deccanherald.com/sports/other-sports/manju-rani-ends-phenomenal-world-run-with-silver-768043.html. 
  6. "2019 World Championships results" (PDF). Archived from the original (PDF) on 13 October 2019. பார்க்கப்பட்ட நாள் 13 October 2019.
  7. "Women's World Boxing Championships: Manju Rani bags silver after losing 48kg final". India Today (in ஆங்கிலம்). 13 October 2019. பார்க்கப்பட்ட நாள் 14 October 2019.
  8. PTI (15 November 2019). "Five world-medallist boxers sign up with IOS" (in en). Deccan Herald. https://www.deccanherald.com/sports/other-sports/five-world-medallist-boxers-sign-up-with-ios-776499.html. 
  9. "World No. 2 boxer Manju Rani alleges non-fulfillment of sponsorship deal" (in en). The Times of India. 29 November 2020. https://timesofindia.indiatimes.com/sports/boxing/world-no-2-boxer-manju-rani-alleges-non-fulfillment-of-sponsorship-deal/articleshow/79479582.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_ராணி&oldid=3909798" இலிருந்து மீள்விக்கப்பட்டது