மஞ்சு கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு கோயல்
நீதிபதி, தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில்
2004–2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-01-03)3 சனவரி 1945
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்

நீதிபதி மஞ்சு கோயல் (Manju Goel-பிறப்பு 1945) தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். ஏப்ரல் 1970-இல், மேற்கு வங்க நீதிமன்ற பணியில் (நீதித்துறை) சேர்ந்த முதல் பெண்மணி ஆனார்.[1]

இளமை[தொகு]

மஞ்சு மறைந்த ஹசாரி லால் மற்றும் ராஜ் குமாரியின் மகளாவார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1967 முதல் 1970 வரை இளங்கலை வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

பணி[தொகு]

மஞ்சு ஏப்ரல் 1970-இல் மேற்கு வங்க உரிமையியல் சேவையில் (நீதித்துறை), (இப்போது மேற்கு வங்க நீதித்துறை சேவை) சேர்ந்தார். பின்னர் இவர் தில்லி நீதித்துறை சேவைகள் மூலம் மே 1972-இல் தில்லி நீதித்துறை சேவையில் சேர்ந்தார். இவர் சனவரி 1986-இல் தில்லி உயர் நீதித்துறை பணிக்குப் பதவி உயர்வு பெற்றார்.

சூலை 5, 2004 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 3சனவரி 2007 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற பிறகு, இவர் 25 சனவரி 2007 அன்று மின்சாரத்திற்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]

மஞ்சு பிரித்தானிய குழுவின் கீழ் "பாலினம் மற்றும் சட்டம்" பயிற்சி பெற்றவர். இவர் பல பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நீதித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தேசிய நீதித்துறை அகாதமியால் தயாரிக்கப்பட்ட நூல்களின் ஆசிரியராகத் தொடர்ந்து பங்களித்து வருகின்றார்.

மஞ்சு தேசிய நீதித்துறை அகாதமி, தில்லி சட்ட அகாதமி மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில நீதித்துறை அகாதமிகளில் சட்டம் சார்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார்.

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் மத்திய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்த இவர், தற்போது சட்ட சேவைகள் வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நன்னடத்தை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்ட கையேடு தயாரிப்பதற்கான குழுவின் தலைவராக உள்ளார்.

சட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி தொகுதி வெளியீடு

நீதிபதி மஞ்சு கோயல் தலைமையில் தேசிய சட்டச் சேவை ஆணையம் மொத்தம் 5 பயிற்சித் தொகுதிகளை வெளியிட்டுள்ளது

இவர் ஒரு நடுவர் மற்றும் மத்தியஸ்தராகவும் இருக்கிறார். தில்லி பன்னாட்டு நடுவர் மையத்தின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[3] இவர் லண்டனில் உள்ள தீர்ப்பாய மையத்தின் குழுவில் முதன்மை நடுவராக உள்ளார். இவர் தில்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆளும் குழுவின் உறுப்பினராகவும், சோத்பூரின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். தேராதூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4] [5] [6] [7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Judges". High Court of Delhi. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  2. "HON'BLE Ms. JUSTICE MANJU GOEL". Appellate Tribunal for Electricity. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  3. "DAC Panel of Arbitrators". Delhi International Arbitration Centre. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  4. "WORKSHOP ON APPLICABILITY OF ADR TECHNIQUES TO REDUCE PENDENCY IN COURTS" (PDF). National Judicial Academy. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  5. "WORKSHOP ON DEVELOPMENT OF SPECIFIC MODULES FOR THE SJAS" (PDF). National Judicial Academy. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  6. "Mediation – An Update" (PDF). Dehlimediationcentre.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  7. "A Decade of Excellence" (PDF). Odisha Judicial Academy. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  8. "Enhancing Judicial Qualities, Attitude and Skills for Judicial Officers of Sikkim on 21st & 22nd June, 2014" (PDF). Sikkim Judicial Academy. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_கோயல்&oldid=3895124" இலிருந்து மீள்விக்கப்பட்டது