உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சுளா சுவைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுளா சுவைன்
சட்டமன்ற உறுப்பினர் ஒடிசா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்தேப்ராஜ் மொகாந்தி
தொகுதிஅசுகா
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
தொழில்அரசியல்வாதி

மஞ்சுளா சுவைன் (Manjula Swain) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். சுவைன் ஒடிசா சட்டமன்றத்திற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அசுகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மஞ்சுளாவின் கணவர் லடு கிசோர் சுவைன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தார். மஞ்சுளா ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

அரசியல்

[தொகு]

மஞ்சுளா பிச்சூ சனதா தளத்தின் ஒரு தொண்டராக ஒடிசா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், மஞ்சுளா பிச்சூ சனதா தள வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய சனதா கட்சி வேட்பாளர் தேப்ராச்சு மொகந்தியை 27,233 வாக்குகள் வித்தியாசத்தில் மஞ்சுளா தோற்கடித்தார். 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தனது பதவிக்காலம் முடியும் வரை இந்த சட்டமன்றத்தில் பணியாற்றினார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் இவர் பிச்சூ சனதா தள வேட்பாளராக அசிகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், அவர் மொத்தம் 51,024 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய சனதா கட்சியின் சரோச்சு குமார் பதியிடம் 8,059 வாக்குகள் வித்தியாசத்தில் மஞ்சுளா தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aska MP passes away". The New Indian Express. 7 February 2019. Retrieved 12 October 2021.
  2. "Aska". News18. Retrieved 12 October 2021.
  3. "Odisha CM Naveen Patnaik appeals people to donate organs, save life". The New Indian Express. 14 August 2021. Retrieved 12 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_சுவைன்&oldid=4240754" இலிருந்து மீள்விக்கப்பட்டது