மஞ்சள் கண் புதர்ச்சிறகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஞ்சள் கண் புதர்ச்சிறகன்
Mycalesis junonia-Thekkady.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: வரியன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)
பேரினம்: Mycalesis
இனம்: M. patnia
இருசொற் பெயரீடு
Mycalesis patnia
(Moore, 1857)[1]

மஞ்சள் கண் புதர்ச்சிறகன் (Gladeye Bush Brown, Mycalesis patnia) இலங்கை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. மூங்கில் வளர்ந்துள்ள இடங்களில் இவை பறப்பதைக் காணலாம். சிறப்பாக பறக்கும் திறனற்ற இவை, தரையை ஒட்டிப் பறக்கும் இயல்புடையது.

வாழ்விடம்[தொகு]

இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் இலங்கையின் ஓரிடவாழ்வியாகக் (endemic) காணப்படுகிறது.

களத்தில் இனமறிதல்[தொகு]

வெளிறிய பழுப்பு நிற இறகுகளின் நடுப்பகுதியில் வெள்ளைக் கோடும் இறுதியில் வெள்ளைக் கோடும் காணப்படும். இதற்கு இடைப்பட்ட பகுதியில் வெளிறிய மஞ்சள் நிற வளையமும் அதனுள் கருப்பு நிற வளையமும் காணப்படும். சிறுசிறு மஞ்சள்புள்ளிகளும் தென்படும்.[2] ஆண், பெண் ஒத்த உருவுடையவை.[3]

மேற்கோள்[தொகு]

  1. Moore, Frederic 1857; in Horsfield & Moore, A Catalogue of the Lepidopterous Insects in the Museum of the Hon. East-India Company (1): 232
  2. காடு, தடாகம் வெளியீடு, பக்: 34, 2016, மே-ஜுன்.
  3. A Catalogue of the Lepidopterous Insects in the Museum of the Hon. East - தாமசு ஆர்சுபீல்டு [1]

வெளியிணைப்புகள்[தொகு]

  • பட்டர்பிளைசு ஆவ் இந்தியா [2]