வரியன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வரியன்கள்
NovaraExpZoologischeTheilLepidopteraAtlasTaf53.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: Lepidoptera
பெருங்குடும்பம்: Papilionoidea
குடும்பம்: வரியன்கள்
Rafinesque, 1815
Subfamilies
உயிரியற் பல்வகைமை
600-உக்கும் மேற்பட்ட பேரினங்களும்
5,700 சிற்றினங்களும்

பட்டாம்பூச்சிக் குடும்பங்களிலேயே வரியன்கள் (Nymphalidae) மிகவும் பெரியதாகும். இக்குடும்பத்தின் 6,000 இனங்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றன. இவை பெரும்பாலும் நடுத்தரத்திலிருந்து பெரிய உருவம்வரை கொண்டிருக்கும். இவற்றில் பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகளின் இரு முன்னங்கால்கள் குன்றிப்போய் இருக்கும். இவை தங்களது வண்ணமிகு இறக்கைகளைப் பரத்திவைத்து ஓய்வெடுக்கின்றன. வரியன் பட்டாம்பூச்சிகள் சிறகன்கள் என்றும் வசீகரன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

புறத்தோற்றம்[தொகு]

பழுப்பு வசீகரன்

இக்குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சிகளின் கால்கள் அடர்ந்த செதில்கள் போர்த்தி தூரிகைபோலக் காணப்படும். இவற்றை மணம் நுகரப்பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.[1] இவற்றின் இறக்கைகள் பலவிதமான நிறங்களையும், வண்ணமயமான திட்டுகள், புள்ளிகள், கண்புள்ளிகளையும் கீற்றுகளையும் கொண்டிருக்கும்.

வாழிடங்கள்[தொகு]

இவை பலதரப்பட்ட வாழிடங்களில் காணப்படுகின்றன. சில இனங்கள் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. கரும்பழுப்புச் சிறகன், மலைச்சிறகன் போன்றவை காடுகளிலும் மலைப்பாங்கான இடங்களிலும் காணப்படுகின்றன. வேறு சில இலையுதிர், பசுமைக்காடுகள் போன்ற இடங்களில் காணப்படும்.

நடத்தை[தொகு]

கறுப்புச்சிறகன்

கறுப்புச்சிறகன், இரட்டைவால் சிறகன் போன்றவை விரைந்து பறக்கும் திறனுடையவை. வளையன்கள், புதர்ச்சிறகன் போன்றவை மெதுவாகப் பறக்கும். ஆரஞ்சு வரியன், வெந்தய வரியன், வெண்புள்ளிக் கறுப்பன் போன்றவை வலசை போகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Gould, S.E. "Butterfly watch: four legs vs. six legs". Scientific American. Scientific American. 7 Sep 2013 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nymphalidae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.