மசூம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசூம் கான்
தாய்மொழியில் பெயர்মাসুম খাঁ
பிறப்பு1604[1]
வங்காளம்
உறவினர்கள்இசா கான் (பெரிய தாத்தா)
சையதா மொமெனா காதுன் (பெரிய பாட்டியின் அம்மா)
கியாசுதீன் மக்முத் சா (பெரிய தாத்தாவின் தந்தை)

மசூம் கான் ( Masum Khan) ( பி. 1604) வங்காளத்தின் ஜமீந்தார் ஆவார். இவர் பரோ-புய்யான் கூட்டமைப்பின் தலைவர் மூசா கானின் மூத்த மகனும் மற்றும் வாரிசும் ஆவார். மேலும், இசா கானின் பேரனுமாவார். [2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

மசூம் கான் சரயிலில் இருந்து வந்த வங்காள முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை, மூசா கான் மற்றும் தாத்தா, இசா கான், இருவரும் பரோ-புய்யான் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். மேலும், இவர்கள் பைசு ராஜ்புத்திரக் குலத்திலிருந்து வந்தவர்கள். வங்காள சுல்தான் கியாசுதீன் மக்மூத் சாவின் திவானாக பணியாற்றுவதற்காக மசூமின் பெரிய தாத்தா பகீரத் அயோத்தியிலிருந்து குடிபெயர்ந்தார். கானின் தாத்தா, காளிதாஸ் கஸ்தானி, திவானாகவும் பணியாற்றினார். மேலும், இப்ராகிம் டேனிசுமந்தின் வழிகாட்டுதலின் கீழ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சுலைமான் கான் என்ற பெயரைப் பெற்றார்.[3] சுலைமான் சுல்தானின் மகள் சையதா மொமெனா காதுனை மணந்தார். மசூம் கானின் பெரிய பாட்டி, மற்றும் சரயிலின் நிலங்களைப் பெற்றார்.[4]

ஆட்சி[தொகு]

ஏப்ரல் 1623 இல் மசூமின் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, முகலாய வங்காளத்தின் சுபாதார் இப்ராகிம் கான் பாத்-இ-சங் மசூம் கானை மூசாவின் தோட்டத்தின் வாரிசாக அங்கீகரித்தார்.

போர்த்துகீசியர்களுக்கு எதிராக முகலாய இராணுவத்தால் 1632 இல் நடந்த ஹூக்ளி முற்றுகையில் மசூம் கான் பங்கேற்றார். பின்னர், மீண்டும் இவர் 1636 இல் அசாமின் முகலாயர் படையெடுப்பில் பங்கேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Banglapedia link mentions he was 7 in 1611.
  2. வார்ப்புரு:Cite Banglapedia
  3. Hussainy Chisti, Syed Hasan Imam (1999), Sharif Uddin Ahmed (ed.), "Arabic and Persian in Sylhet", Sylhet: History and Heritage, Bangladesh Itihas Samiti: 600, ISBN 978-984-31-0478-6
  4. வார்ப்புரு:Cite Banglapedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசூம்_கான்&oldid=3836658" இலிருந்து மீள்விக்கப்பட்டது