மசாட்சுகு அசகாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மசாட்சுகு அசகாவா
Masatsugu Asakawa
ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவர்
பதவியேற்பு
17 சனவரி 2020
முன்னவர் டேகிகோ நகாவோ
பிரதமரின் சிறப்பு ஆலோசகர் மற்றும் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்
பிரதமர் சின்சோ அபே
அமைச்சர் டாரோ ஆசோ
சர்வதேச விவகாரங்களுக்கான நிதி அமைச்சர்
பதவியில்
2015–2019
அமைச்சர் டாரோ ஆசோ
தனிநபர் தகவல்
பிறப்பு 1958 (அகவை 62–63)
சிசுயோகா மாகாணம், சப்பான்
தேசியம் சப்பானியர்
படித்த கல்வி நிறுவனங்கள் டோக்கியோ பல்கலைக்கழகம் (BA)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (MPA)
பணி அரசு பொது பணியாளர்

மசாட்சுகு அசகாவா (பிறப்பு 1958), ஒரு சப்பானிய அரசு ஊழியர், ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) தலைவராக உள்ளார். 2020 ஜனவரி 17 அன்று பதவியேற்ற அசகாவா, ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவராக உள்ளார். [1] அவர் முன்னர் சப்பானின் பிரதம மந்திரி ஷின்சோ அபே மற்றும் சப்பானின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான டாரோ அசோ ஆகியோரின் சிறப்பு ஆலோசகராக இருந்துள்ளார். முன்னதாக சப்பானில் நிதி அமைச்சகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சராகவும் இருந்தள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சப்பானின் சிசுயோகா மாகாணத்தில் பிறந்த அசகாவா , டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் படித்து 1981 இல் இளங்கலை பட்டம் பெற்றார். [2] அதே ஆண்டு சப்பானில் உள்ள நிதி அமைச்சகத்தில் சேர்ந்தார். அசகாவா பின்னர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1985 இல் எம்பிஏ பட்டம் பெற்றார்.

அரசு இணைந்த பணிகள்[தொகு]

சப்பானில் நிதி அமைச்சகத்தில் மசாட்சுகு அசகாவாவின் பணிகள் பின்வருமாறு:

  • 2000-2002: பிராந்திய நிதி ஒத்துழைப்பு பிரிவு, வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • 2002-2004: சர்வதேச வரிக் கொள்கை பிரிவு, வருமானவரித்துறை
  • 2004-2006: அந்நிய செலாவணி சந்தைகள் பிரிவு
  • 2006-2007: வளர்ச்சி கொள்கை பிரிவு
  • 2007-2008: சர்வதேச பணியகத்தின் ஒருங்கிணைப்பு பிரிவு இயக்குனர்
  • 2009–2013: சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர்
  • 2012–2013: சர்வதேச பணியகத்தின் மூத்த துணை இயக்குநர் செனரல் மற்றும் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் நிர்வாக உதவியாளர், நிதி அமைச்சகம்
  • 2013–2014: கொள்கை திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துணை அமைச்சர்
  • 2014–2015: சர்வதேச பணியகத்தின் இயக்குநர் செனரல்
  • 2015–2019: ஜி20 / ஐஎம்எப் பிரச்சினைகள், அந்நிய செலாவணி வீதக் கொள்கை, [3] மற்றும் மேம்பாட்டு உதவி உள்ளிட்ட ஜப்பானிய நிதி அமைச்சகத்தின் அனைத்து சர்வதேச கொள்கைகளுக்கான பொறுப்புகளுடன் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர்[தொகு]

ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர்கள் குழு (ADB) வங்கியின் 10 வது தலைவராக அசகாவா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக 2 டிசம்பர் 2019 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. [4] செப்டம்பர் 2019 இல் சப்பான் அரசு அசகாவாவை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பொறுப்புக்கு வேட்பாளராக பரிந்துரைத்தது. [5] முன்னாள் ஏடிபி தலைவர், டேகிகோ நகாவோ, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியில் இருந்து 16 சனவாி 2020 இல் விலகினார். அசகாவா 17 சனவாி 2020 அன்று ஏடிபியின் 10 வது தலைவராக தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. ADB, 'New ADB President Masatsugu Assumes Office', 'News release, 17 January 2020.
  2. "Masatsugu Asakawa elected ADB president" (en-US) (2019-12-03).
  3. In 2016, the Financial Times described Asakawa as "Japan's top currency official"; see Japan’s Asakawa: will look at how to respond to market', Financial Times, 24 June 2016.
  4. ADB, 'Masatsugu Asakawa Elected ADB President', News release, 2 December 2019.
  5. 'Japan eyes ex-top currency diplomat Masatsugu Asakawa as next head of ADB', The Japan Times, 17 September 2019.
  6. ADB, 'Announcement of Intent of Resignation by ADB President Takehiko Nakao', News release, 17 September 2019.
  7. Masatsugu Asakawa, 'My Vision for ADB', 1 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாட்சுகு_அசகாவா&oldid=2961657" இருந்து மீள்விக்கப்பட்டது