மங்கோலியர்களின் எழுச்சி: ஐந்து சீன ஆதாரங்கள்
Appearance
மங்கோலியர்களின் எழுச்சி: ஐந்து சீன ஆதாரங்கள் (The Rise of the Mongols: Five Chinese Sources) என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இந்நூலை கிறித்தோபர் அட்வுட் என்கிற அமெரிக்க வரலாற்றாளர் எழுதியுள்ளார். இந்நூல் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சீனர்களின் பார்வையில் மங்கோலியர்களின் எழுச்சியைப் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து சீன நூல்கள் முறையே,
- "ஜியான்யான் ஆண்டுகள் முதல், நீதிமன்றம் மற்றும் நாட்டிலிருந்து தொடர்பற்ற குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட தேர்வுகள், தொகுதி 2" - லீ சின்சுவான்
- "மங்-தாதர்கள் பற்றிய ஒரு பதிவு" - சாவோ காங்
- "கறுப்பு தாதர்கள் பற்றிய ஒரு சுருக்கம்" - பெங் தயா மற்றும் சு டிங்
- "செயலகத்தின் இயக்குநர் மரியாதைக்குரிய எலு அவர்களுக்காக ஆன்ம வழி நடுகல்" - சாங் சிச்சென்
- "பயணக் குறிப்புகள்" - சாங் தெகுயி
இதில் மூன்று நூல்கள் தெற்கு சாங் அரசமரபின் தூதுவர்களாலும், இரண்டு நூல்கள் மங்கோலியர்களிடம் பணியாற்றிய வடக்கு சீன அதிகாரிகளாலும் எழுதப்பட்டுள்ளன. இந்நூல்கள் ஆரம்பகால மங்கோலியர்களின் மீது ஒரு மாறுபட்ட பார்வையை நமக்குக் கொடுக்கின்றன. இவை இசுலாமிய மற்றும் கிறித்தவ பயணிகளின் நூல்களில் இருந்து மட்டும் வேறுபடாமல், மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் இருந்தும் வேறுபடுகின்றன.[1]