மகுண்ட சுப்பராம ரெட்டி
மகுண்ட சுப்பராம ரெட்டி Magunta Subbarama Reddy | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1991-1995 | |
முன்னையவர் | மேகபதி இராஜ்மோகன் ரெட்டி |
பின்னவர் | மகுந்தா பர்வதம்மா |
தொகுதி | ஓங்கோல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நெல்லூர், சென்னை மாகாணம், இந்திய மேலாட்சி அரசு (தற்பொழுது ஆந்திரப் பிரதேசம், இந்தியா) | நவம்பர் 26, 1947
இறப்பு | திசம்பர் 1, 1995 | (அகவை 48)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பார்வதி |
மூலம்: [1] |
மகுண்ட சுப்பராம ரெட்டி (Magunta Subbarama Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று நெல்லூர் மாவட்டத்தில் மகுண்ட ராகவ ரெட்டிக்கு மகனாக இவர் பிறந்தார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஓங்கோல் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் (ஐ) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மகுண்ட சுப்பராம ரெட்டி கர்நாடகா மாநிலம் தும்கூரில் பொறியியல் படித்துவிட்டு படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டார். 1967 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பார்வதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.
பாலாச்சி குழுமத்தின் நிறுவனராக மகுண்ட சுப்பராம ரெட்டி அறியப்படுகிறார். மகுண்டா சுப்பராமிரெட்டி அறக்கட்டளை மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்து சமூகப்பணியாற்றினார். நெல்லையில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலின் அறங்காவலராக இருந்தார். சென்னை கலாசாகர் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். ஏழைகளுக்கு இலவச குடிநீர் விநியோகம், கோயில்கள் கட்டுதல், சமுதாயக் கூடங்கள், நலிந்த பிரிவினருக்கு திருமண மண்டபங்கள் கட்டுதல் போன்ற சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SC upholds life sentence of Maoist in ex-MP killing case". Hindustan Times. 27 July 2009. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
- ↑ K. K. Thomas (1996). Asian Recorder. Recorder Press. p. 25314.
- ↑ "Supreme Court of India Pantangi Balarama Venkata Ganesh vs State Of A.P on 23 July, 2009". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.