உள்ளடக்கத்துக்குச் செல்

மகுந்தா பர்வதம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகுந்தா பார்வதி சுப்ரம்மா ரெட்டி (Magunta Parvathamma, 27 சூலை 1947 – 25 செப்டம்பர் 2024[1]) என்பவர் பொதுவாக மகுந்தா பர்வதம்மா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் பதினொராவது மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

இளமை

[தொகு]

மகுந்தா 1947 சூலை 27 அன்று சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிபாலத்தில் பெசவாடா இராம ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார். கசுதூரி தேவி பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[2]

தொழில்

[தொகு]

1996 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்தியத் தேசிய காங்கிரசு பர்வதம்மாவை ஒங்கோல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. இவர் 3,81,475 வாக்குகளும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் மேகபதி இராஜ்மோகன் ரெட்டி 3,31,415 வாக்குகளும் பெற்றனர்.[3] இத்தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு 11வது மக்களவை உறுப்பினரானார்.[2] 2004 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின் போது, மொத்த வாக்குகளில் 57.68% பெற்று கவாலி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[4] 2012 ஆந்திரப் பிரதேச இடைத்தேர்தலின் போது ஒங்கோலு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்களில் பர்வதம்மாவும் ஒருவர்.[5] இவர் பியர்ல் மதுபான ஆலையின் இயக்குநர் ஆவார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மகுந்தா 1967 பிப்ரவரி 19 அன்று அரசியல்வாதியான மகுந்தா சுப்பராம ரெட்டியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.[2] ரெட்டி 1995-இல் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bandari, Pavan. "Former MP Magunta Parvathamma passes away due to ill health". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
  2. 2.0 2.1 2.2 "Biographical Sketch of Members of the XI Lok Sabha: Reddy, Smt. Magunta Parvathi Subramma". Lok Sabhaaccess-date=27 November 2017.
  3. "Statistical Report on General Elections, 1996 to the Eleventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 26. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  4. "State Elections 2004 - Partywise Comparison for 125-Kavali Constituency of Andhra Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  5. "Magunta Parvathamma hits the campaign trail". The Hindu. 6 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/magunta-parvathamma-hits-the-campaign-trail/article3389975.ece. பார்த்த நாள்: 27 November 2017. 
  6. "Magunta Parvathamma". Zauba Corp. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  7. "Lifer for two for Magunta's murder". The Hindu. 5 August 2000. http://www.thehindu.com/2000/08/05/stories/0405201b.htm. பார்த்த நாள்: 27 November 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுந்தா_பர்வதம்மா&oldid=4096066" இலிருந்து மீள்விக்கப்பட்டது