மகுசா அமினி
மகுசா ஜினா அமினி | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 21, 1999[1] சாக்வெசு, ஈரான் |
இறப்பு | (அகவை 22) தெகுரான், ஈரான் |
கல்லறை | சாக்வெசில் உள்ள அய்சி கல்லறை |
மகுசா ஜினா அமினி (Mahsa Amini, பாரசீக மொழி: مهسا امینی; Kurdish; செப்டம்பர் 21, 1999 [2] – செப்டம்பர் 16, 2022) ஒரு இளம் ஈரானியப் பெண். இவர் தெகுரானில் கட்டாய ஹிஜாபை எதிர்த்து நின்றதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் காவல்துறையின் கண்காணிப்பில் இறந்தது ஈரான் முழுவதும் எதிர்ப்பு அலைகளைத் தூண்டியது. உலகெங்கிலும் உள்ள மக்களும் அரசாங்கங்களும் இவரது மரணத்திற்கு பரவலாக எதிர்வினையாற்றினர்.[3][4][5][6] இவரது மரணம் ஈரானிய சமுதாயத்தில் பரவலான எதிர்ப்பைத் தூண்டியது இதன் விளைவாக ஈரானின் பல்வேறு நகரங்களில் பெரும் எதிர்ப்புகள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து ஒற்றுமையின் எதிர்வினைகள் ஏற்பட்டன.[7][8][9][10][11] பெண், வாழ்க்கை, சுதந்திரம் என்ற உலகளாவிய இயக்கமும் இவரிடமிருந்து தொடங்கியது.[12][13] இவரும் இந்த இயக்கமும் 2023-ஆம் ஆண்டில் சகாரோவ் பரிசுக்கான வேட்பாளர்களாக ஐரோப்பிய பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன.[14][15] சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்ததற்காக இந்த விருதை வென்றார்.[16][17][18]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மகுசா ஜினா அமினி செப்டம்பர் 21, 1999 அன்று [1] வடமேற்கு ஈரானில் உள்ள குர்திஸ்தானில் உள்ள சாக்வெஸ் என்ற இடத்தில் குர்திஷ் குடும்பத்தில் பிறந்தார். மகுசா என்பது அவரது சட்டப்பூர்வ பெயராக இருந்தபோதிலும் (பாரசீக பெயர்கள் ஈரானில் மட்டுமே பதிவு செய்யப்படலாம்), இவரது குர்திஷ் பெயர் ஜினா (ஜினா என்றும் உச்சரிக்கப்படுகிறது), மேலும் இது அவரது குடும்பத்தில் அறியப்பட்ட பெயராகும்.[19] பாரசீக மொழியில் "மஹ்சா" என்றால் "சந்திரனைப் போன்றது" [20] மற்றும் குர்திஷ் மொழியில் ஜினா என்றால் "உயிர்" அல்லது "உயிர் கொடுக்கும் நபர்" என்று பொருள்.[21] இரண்டு பதின்ம ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையைப் போலவே, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குர்திஷ் பெயரைக் கொண்டிருப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அரசு அதிகாரிகள் இவரது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயரை மஹ்சா என்று மாற்றினர். காலப்போக்கில், குர்திஷ் பெயர்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் ஜினா மற்றும் மஹ்சா ஆகிய இரண்டும் இருந்தன.
இவர் தனது இடைநிலைப் பள்ளியை ஹிஜாப் என்ற பள்ளியில் முடித்தார். இவர் பட்டயக் கல்வியைப் படிக்க தலேகானி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றாள். அமினி பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.[22][23][24] அமினி தனிமையில் இருந்தார், பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இவர் தனது பெற்றோர் மற்றும் 17 வயது சகோதரர் அஷ்கானுடன் உறவினர்களைப் பார்க்க தெஹ்ரானுக்குச் சென்றிருந்தார்.[25] மருத்துவராக ஆசைப்படுவது முதல் நீச்சலில் பயிற்சிப் பட்டம் பெறுவது மற்றும் நுண்ணுயிரியலில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது வரை, பூமியில் அவருடைய பயணம் தீவிரமான ஆசைகளுடனும் உறுதியுடனும் நிறைந்திருந்தது.[26]
குடும்பம்
[தொகு]இவரது தாயார் ஷாராக் தொடக்கப் பள்ளி, ஹிஜாப் மேல்நிலைப் பள்ளி மற்றும் தலேகானி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டுகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் செயலில் உறுப்பினராக இருந்தார். இவருக்கு கியாராஷ் (அஷ்கான்) என்ற ஒரு தம்பி இருந்தார்.[27] அமினியின் தந்தை, அம்ஜத் அமினி,[28] ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிபவர் மற்றும் அவரது தாயார், மோஜ்கன் அமினி,[22] ஒரு இல்லத்தரசி ஆவர்.[29] இவர் சாக்கஸில் உள்ள தலேகானி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 2018- ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அமினிக்கு பல உறவினர்கள் இருந்தனர், அவர்களில் சிலர் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர் எர்பான் மோர்டேசாய்,[30][31] கோமலா கட்சியைச் சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர் மற்றும் ஈராக் குர்திஸ்தானில் தனியாக நாடு கடத்தப்பட்ட பெசுமெர்கா போராளியும் ஆவார்.[32] அமினியின் மரணத்திற்குப் பிறகு ஊடகங்களில் அமினியின் குடும்பத்திலிருந்து முதலில் பேசியவர் இவரேயாவார்.[32] எர்பானுக்கு அரசியல் தொடர்புகள் இருந்தபோதிலும், அமினிக்கு முன்னதாக அரசியல் இயக்கங்களுடன் தொடர்பிருந்தது என்று கூறிய ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுக்களை அவர் மறுத்துள்ளார்.[32] மாறாக, அமினி தனது [33] ஊரில் "கூச்சப்படும் இயல்புள்ள, தனித்து வசிக்கும் இயல்புடையவர்" என்று விவரிக்கப்படுகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். அமினி அரசியலைத் தவிர்த்தே இருந்தார், அமினி பதின்பருவத்தினராக இருந்தபோதும் ஒருபோதும் அரசியல் ரீதியாக செயல்படவில்லை என்றும், அரசியல் ஆர்வலராக இல்லை என்றும் கூறப்படுகிறது.[29] மற்றொரு உறவினரான தியாகோ முகமதி,[34] நார்வேயில் வசிக்கிறார். அவர் அங்குள்ள ஊடகங்களிடம் அமினியைப் பற்றிப் பேசினார்.[35] அமினியின் குடும்பத்தினர் அவருக்கு முன் உடல்நலக் குறைவு இல்லாதவர் என்றும், 22 வயதுடைய "ஆரோக்கியமான" நபர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அமினி முன் உடல்நலக் குறைவு கொண்டிருந்தவர் என்ற ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கு மாறாக அவருக்கு முன் உடல்நலம் இருந்தது.[27] அமினியின் மாமா சஃபா அவள் இறந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Woman, Life, Freedom! Why I Heard the Rallying Call for Mahsa Amini, inspirelle, October 5, 2022
- ↑ Woman, Life, Freedom! Why I Heard the Rallying Call for Mahsa Amini, inspirelle, September 21, 2022
- ↑ Mahsa Amini died of 'blow to the head': family in Iraq, Hindustan TImes, Sep 28, 2022
- ↑ Forensics Report Says Mahsa Amini Died of Skull Injury, IranWire, 30 Sep 2022
- ↑ Mahsa Amini died after 'blow to head' in Iranian police custody, Times of Israel, 29 Sep 2022
- ↑ "Eyewitness account of violent treatment of Ershad patrol, 22-year-old Saqqez girl in coma", Radio Zamaneh, 17 Sep 2022
- ↑ Mahsa Amini: how one woman’s death ignited protests in Iran , The Guardian, 3 Oct 2022
- ↑ Why Mahsa Amini's death could be a turning point for women in Iran, MSNBC, 30Sep 2022
- ↑ Mahsa Amini: Top Iran official urges security forces to deal with protesters harshly as videos emerge of people running while gunshots fire, Sky News, 3 Oct 2022
- ↑ Mahsa Amini has become a potent symbol for women in Iran, Financial Times, 27 Sep 2022
- ↑ Mahsa Amini: The Spark That Ignited A Women-Led Revolution, Forbes, Dec 6, 2022
- ↑ Words have power: What are the origins of Iran's protest chant 'woman, life, freedom'? , euro news, 01/02/2023
- ↑ Jina Mahsa Amini: The face of Iran's protests, DW, 12/06/2022
- ↑ Mahsa Amini And Iran's Women, Life, Freedom Movement.., Radio Farda, October 11, 2023
- ↑ Mahsa Amini, Elon Musk Nominated for EU's Top Rights.., VOA, October 11, 2023
- ↑ Mahsa Amini awarded EU's Sakharov human rights prize, BBC, October 19, 2023
- ↑ Jina Mahsa Amini wins EU's Sakharov Prize, DW, 10/19/2023
- ↑ Jina Mahsa Amini and Iranian women protest movement win the 2023 Sakharov Prize, European Parliament, September 16, 2023
- ↑ "Iran protests: Mahsa Amini's family receiving death threats, cousin says" (in en-GB). BBC News. 2022-10-10. https://www.bbc.com/news/world-middle-east-63200649.
- ↑ Meaning of the word Mahsa, NameFarsi
- ↑ The meaning of the word "Gina", Setareh Website
- ↑ 22.0 22.1 "Woman Who Died After Arrest By Iran's Morality Police Buried Amid Chants Of 'Death To The Dictator'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ Mahsa Amini's family files complaint in Iran over her arrest, Alarabia, 29 Sep 2022
- ↑ "She was tortured": Mahsa Amini's family speaks out amid Iran, CBS News, 28 Sep 2022
- ↑ Mahsa Amini died after ‘blow to head’ in Iranian police custody, says cousin in Iraq, The Times of Israeal, 28 September 2022
- ↑ Her Name Was Mahsa; A Swimming Coach Who Wanted to Become a Doctor, IranWire, September 12, 2023
- ↑ 27.0 27.1 "Iranians are Furious after a Young Woman Dies While in Custody of the Hijab Police" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "Mahsa Amini's Father Rejects Coroner's Report About Her Death" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ 29.0 29.1 "Who was Mahsa Amini, the face of mass protests in Iran" (in de). https://www.nzz.ch/english/who-was-mahsa-amini-the-face-of-mass-protests-in-iran-ld.1704917.
- ↑ Mahsa Amini was 'tortured and insulted' before death in police custody in Iran, her cousin says, Sky news, 26 September 2022
- ↑ Family Frantically Searched for Iranian Woman After Arrest, Voa news, September 29, 2022
- ↑ 32.0 32.1 32.2 "Mahsa Amini was 'insulted and tortured' before death: cousin" (in ஆங்கிலம்). 2022-09-26. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "Iranian woman whose death led to mass protests was shy and avoided politics" (in en). 2022-09-28. https://www.reuters.com/world/middle-east/iranian-woman-whose-death-led-mass-protests-was-shy-avoided-politics-2022-09-28/.
- ↑ Diako, 26, mourns cousin Mahsa Amini: "Hard to take in", lipstickalley, 2022
- ↑ Mahsa Amini’s cousin: – They kill protesters to prove that they have not killed my cousin , Norwey Posts, 1 Oct 2022