மகளிர் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகளிர் துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Women's cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் பெண்களால் விளையாடும் ஒரு அணி விளையாட்டு ஆகும். முதல் பதிவுசெய்யப்பட்ட மகளிர் துடுப்பாட்டம் 26 சூலை 1745 அன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. [1]

வரலாறு[தொகு]

மகளிர் துடுப்பாட்டம் முதல் பதிவு செய்யப்பட்ட போட்டி 26 சூலை 1745 அன்று தி ரீடிங் மெர்குரியில் நடைபெற்றமு. ஒரு போட்டி "பிராம்லியின் பதினொரு பணிப்பெண்களுக்கும், கம்பிள்டனின் பதினொரு பணிப்பெண்களுக்கும் இடையில் அனைவரும் வெள்ளை நிற உடையணிந்து" போட்டி நடைபெற்றது. முதன்முதலில் அறியப்பட்ட மகளிர் துடுப்பாட்டம் கிளப் 1887 ஆம் ஆண்டில் யார்செயரில் உருவாக்கப்பட்டது, இது வெள்ளை கீதர் கிளப் என்று பெயரிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அசல் ஆங்கில மகளிர் துடுப்பாட்ட வீரர்கள் என அழைக்கப்படும் ஒரு குழு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆத்திரேலியாவில், ஒரு மகளிர் துடுப்பாட்ட லீக் 1894 இல் அமைக்கப்பட்டது, தென்னாப்பிரிக்காவில் போர்ட் எலிசபெத் ஒரு மகளிர் துடுப்பாட்ட அணியான முன்னோடி கிரிக்கெட் கிளப்பைக் கொண்டிருந்தது . [2] கனடாவில், விக்டோரியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியும் பெக்கான் கீல் பூங்காவில் விளையாடியது. [3]

1958 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் மகளிர் துடுப்பாட்ட அவை (ஆங்கிலம்: International Women's Cricket Council (IWCC) உலகெங்கிலும் உள்ள பெண்கள் கிரிக்கெட்டை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது, ஆங்கில மகளிர் துடுப்பாட்ட சங்கத்திலிருந்து பொறுப்பேற்றது. 2005 ஆம் ஆண்டில், பன்னாட்டுத் மகளிர் துடுப்பாட்ட அவை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) இணைக்கப்பட்டு துடுப்பாட்ட நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் உதவும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியது.

மகளிர் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

ஆத்திரேலிய துடுப்பாட்ட வீராங்கனையும் அதே நேரத்தில் மேற்கு இந்தியா தீவுகள் இலக்குக் கவனிப்பாளர் மகளிர் பன்னாட்டுத் துடுப்பாட்டம் போட்டியின் போது, 2014

காமன்வெல்த் விளையாட்டு 2022[தொகு]

ஆகத்து 2019 இல், காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு 2022 காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் துடுப்பாட்டத்தை சேர்ப்பதாக அறிவித்தது. எட்க்பாஸ்டனில் நடைபெறவுள்ள போட்டிகளில் மொத்தம் எட்டு அணிகள் இடம்பெறும், அவை இருபது20 வடிவத்தில் போட்டிகள் நடைபெறும். [4]

மேற்கோள்கள்[தொகு]