போலா ரவுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலா ரவுத்து
Bhola Raut
நாடாளுமன்ற உறுப்பினர் , மக்களவை (இந்தியா)
பதவியில்
1952–1977
பின்னவர்சகந்நாத் பிரசாத் சுவதந்த்ரா
பதவியில்
1980–1989
முன்னையவர்சகந்நாத் பிரசாத் சுவதந்த்ரா
பின்னவர்மகேந்திர பைதா
தொகுதிபகாகா மக்களவைத் தொகுதி , பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-11-04)4 நவம்பர் 1914
பெட்டியா, மேற்கு சம்பாரண் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பாபுனி தேவி
பிள்ளைகள்4 மகன்கள், 1 மகள்
மூலம்: [1]

போலா ரவுத்து (Bhola Raut) இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

போலா ரவுத்து 1914 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மேதார் சாதியில் அரிகர ராவத் என்பவருக்கு பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தில் (தற்போது மேற்கு சம்பாரண், பீகார் ) சம்பாரண் பகுதியிலுள்ள பெத்தியா நகரத்தில் பிறந்தார்.[1]

அரசியல்[தொகு]

1952, 1957, 1962, 1967, 1971, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் பீகாரில் உள்ள பகாகா தொகுதியில் இருந்து போலா ரவுத்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 1950-51 ஆம் ஆண்டில் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

போலா ரவுத்து தாழ்த்தப்பட்ட வகுப்புகள் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளராகவும், மெகதர் டோம் சபாவின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய மெகதர் மசுதூர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், பீகார் மாநில சஃபாய் மசுதூர் சங்கத்தின் தலைவராகவும், பீகார் மாநில தோட்டக்காரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலா_ரவுத்து&oldid=3807247" இலிருந்து மீள்விக்கப்பட்டது