போயிகா மெலனோட்டா
போயிகா மெலனோட்டா | |
---|---|
போயிகா மெலனோட்டா-மேற்கத்திய அலையாத்திக் காட்டுப் பூனைப்பாம்பு புக்கிட்டு, செலாங்கூரில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போயிகா
|
இனம்: | போ. மெலனோட்டா
|
இருசொற் பெயரீடு | |
போயிகா மெலனோட்டா (பெளலஞ்சர், 1896) |
போயிகா மெலனோட்டா (Boiga melanota) என்பது மேற்கத்திய அலையாத்திக் காட்டுப் பூனைப்பாம்பு பொதுவாக அறியப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய பூனைப்பாம்புகளில் ஒன்றாகும்.[1] இது தாய்லாந்து, மேற்கு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் (சுமாத்திரா) காணப்படுகிறது.[2] இது 40 முதல் 50 மஞ்சள் கோடுகளால் குறிக்கப்பட்ட பளபளப்பான நீலக் கருப்பு நிறத்தில் இப்பாம்பு காணப்படும். வாய் மற்றும் தொண்டை பகுதி மஞ்சள் நிறமாகவும், உடலின் உட்புறம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். கண்கள் சாம்பல் நிறத்தில் உள்ளன. இது இலேசான நச்சுப் பாம்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நடத்தை
[தொகு]ஒரு முதிர்ந்த சதுப்புநிலப் பாம்பு 2.5 மீட்டர் (8 அங்குலம்) நீளம் வரை காணப்படும். இது இரவில் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. பறவை, எலி மற்றும் பறவைகளின் முட்டைகளை இதன் முக்கிய உணவாக வேட்டையாடுகிறது. இதன் பெரிய தலை மற்றும் வாய் இதன் இரையை எளிதில் விழுங்க உதவுகிறது. சமீபத்தில் டென்ட்ரோபிலா குடும்பத்திற்குள் மறு வகைப்படுத்தப்பட்ட இவை ஒத்த நிறம் மற்றும் பின்னோக்கிய விசப் பல் போன்ற சில உடல் பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Henrik Bringsøe, 2001. Boiga melanota (Western Mangrove Cat Snake): Diet
- ↑ Harrington, Sean M; Jordyn M de Haan, Lindsey Shapiro, Sara Ruane 2018. Habits and characteristics of arboreal snakes worldwide: arboreality constrains body size but does not affect lineage diversification. Biological Journal of the Linnean Society 125 (1): 61–71
- ↑ சிற்றினம் Boiga melanota at The Reptile Database