பூனைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
போயிகா
இனம்:
போ, டிரைகோனாடா
இருசொற் பெயரீடு
போயிகா டிரைகோனாடா
செனிடர், 1802

பூனைப் பாம்பு[1] (Boiga trigonata) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பாம்பு ஆகும். இது நஞ்சுள்ளது என்றாலும் இதன் நஞ்சு மனிதரைக் கொல்லுமளவுக்கு வீரியமானதாக இல்லை.

விளக்கம்[தொகு]

பூனைப்பாம்பு (லோனாண்ட், மகாராட்டிரம்)

பூனைப்பாம்பின் மேற்தாடையின் கடைவாயில் நச்சுப்பல்லைப் பெற்றிருக்கிறது. இந்த பாம்பின் கண்கள் பெரியதாக துருத்தியபடி இருக்கும். அதில் உள்ள பாவை செங்குத்தாக இருக்கும். இதன் உடல் பழுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தில் இருந்து மேலிருந்து கீழே குதப்பகுதி வரை வெள்ளை நிற வரிகள் காணப்படும். இந்த பாம்பின் முக்கிய அடையாளமாக முக்கோண வடிவ தலையும் அதில் Y வடிவ தலைகீழான அடையாளமும் ஆகும். இது அச்சுறுத்தப்பட்டால் முன் உடலை S வடிவில் மடக்கியபடி எதிர்ப்பைக் காட்டும். மேலும் தன் மெல்லிய வாலை மேல் நோக்கி தூக்கி ஆட்டி எதிரியை திசை திருப்பி எச்சரிக்கும்.

இந்த பாம்பின் மொத்த நீளம் சுமார் 3 அடி (91 செமீ) ஆகும். இதில் வாலின் நீளம் 7-அங்குளம் (18 செ.மீ.) இருக்கும். [2]

புவியியல் எல்லை[தொகு]

இது இலங்கை, இந்தியா, பாக்கித்தான், நேபாளம், வங்காளதேசம், ஆப்கானித்தான் (லெவிடன் 1959: 461), தெற்கு துருக்மெனிஸ்தான், தெற்கு உசுபெக்கிசுத்தான், தென்கிழக்கு தஜிகிஸ்தான், ஈரான் முழுவதும் பரவலாக உள்ளது.

ஒத்த தோற்றம்[தொகு]

பொய்கா திரிகோனாட்டா (சதாரா, மகாராஷ்டிரா)

பூனைப்பாம்பு நிறத்திலும் வடிவத்திலும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பான சுருட்டைவிரியன் பாம்பை ஒத்துள்ளது. மேலும், இந்தியாவில், இந்த இரண்டு இனங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான புவியியல் எல்லையில் வாழ்கின்றன. [2]

குறிப்புகள்[தொகு]

  1. "நல்ல பாம்பு 9: பூனையைப் போன்ற கண்கள்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
  2. 2.0 2.1 Boulenger, G.A. 1890. The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Secretary of State for India in Council. (Taylor and Francis, Printers.) London. xviii + 541 pp. (Dipsas trigonata, p. 358.)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனைப்பாம்பு&oldid=3652309" இலிருந்து மீள்விக்கப்பட்டது