போச்சேரா அருவி
Appearance
போச்சேரா அருவி | |
---|---|
அமைவிடம் | போத் மண்டலம், ஆதிலாபாத் மாவட்டம், தெலங்காணா |
வகை | அருவி |
மொத்த உயரம் | 20 மீட்டர் |
போச்சேரா அருவி (Pochera Falls) என்பது இந்தியாவில் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ஒரு அருவியாகும்.
அமைவிடம்
[தொகு]போச்சேரா அருவி தெலங்காணா மாநிலம் ஆதிலாபாத்திலிருந்து 47 கி. மீ. தொலைவிலும், நிர்மலிலிருந்து 37 கி. மி. தொலைவிலும் போத்திலிருந்து 7 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] போச்சேரா அருவி சமீபத்தில் அறியப்பட்ட அருவியாகும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[2]
கண்ணோட்டம்
[தொகு]போச்சேரா நீர்வீழ்ச்சி சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து விழும் அருவியாகும். சிறிய வகை அருவியாக இது வகைப்படுத்தப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கான நீர் கோதாவரி ஆறு சக்யாத்ரி மலைத் தொடரில் பாயும் போது சிறிய நீரினால் ஏற்படும் ஓடையினால் தோன்றியதாகும்.[1]
மேற்கோள்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Nature Discovery in Telangana :: Telangana Tourism". partials (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Nature Discovery in Telangana :: Telangana Tourism". telanganatourism.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.[தொடர்பிழந்த இணைப்பு]