பேரெழிற்புள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரெழிற்புள் (Astrapia stephaniae) என்பது கிட்டத்தட்ட 37 செமீ வரை வளரும் நடுத்தர அளவான கரிய சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது ஒளிர்வான நீலப் பச்சை மற்றும் ஊதா நிறங் கொண்ட தலையையும், பட்டுப் போன்ற கீழ்ப் பகுதி இறகமைப்பையும், மிகவும் நீண்டு அகன்ற ஊதா கலந்த கருநிறமான வாலிறகுகளையும் கொண்டிருக்கும். இதன் பெண் பறவை நீலங் கலந்த கருமையான தலையையும் கரிய கோடுகளுடன் கூடியதான கறுவா போன்ற கபில நிறத்திலான கீழ்ப் பகுதியையுங் கொண்ட கடுங்கபில நிறத்தினதாகும். இவ்வினம் பரவிக் காணப்படும் மிகக் குறுகிய பகுதியில் காணப்படுவதான, இவ்வினத்துக்கும் நாடாவால் எழிற்புள் இனத்துக்கும் கலந்து பிறந்த பறவையானது பெருவால் எழிற்புள் என அழைக்கப்படும்.

பேரெழிற்புள்ளானது 1884 ஆம் ஆண்டு கார்ல் ஹன்சுற்றைன் என்பவராற் கண்டறியப்பட்டது. இவ்வினம் பப்புவா நியூ கினி நாட்டின் நடு மற்றும் கிழக்குப் பகுதிகளிற் காணப்படும் மலைசார் காடுகளுக்கு மாத்திரமே தனிச்சிறப்பானதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • BirdLife International (2004). Astrapia stephaniae. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்[தொகு]

  1. BirdLife International (2018). "Astrapia stephaniae". IUCN Red List of Threatened Species 2018: e.T22706222A130412419. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706222A130412419.en. https://www.iucnredlist.org/species/22706222/130412419. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரெழிற்புள்&oldid=3603814" இலிருந்து மீள்விக்கப்பட்டது