பேன்யோசு (எக்குவடோர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேன்யோசு டெ அக்குவா சான்ட்டா
கிழக்கிலிருந்து பேன்யோசு.
கிழக்கிலிருந்து பேன்யோசு.
பேன்யோசு டெ அக்குவா சான்ட்டா-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): பேன்யோசு
நாடுஎக்குவடோர்
மாகாணம்துங்குராகுவா
மாவட்டம்பேன்யோசு மாவட்டம்
அரசு
 • வகைமேயரும் நகரமன்றமும்
 • மேயர்மார்லோன் பேப்ரிகோ குவாரா சில்வா
ஏற்றம்1,820 m (5,971 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்14,653[1]
நேர வலயம்எக்குவடோர் நேரம் (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு(0)3
இணையதளம்www.municipiobanos.gob.ec

பேன்யோசு டெ அக்குவா சான்ட்டா (Baños de Agua Santa), பொதுவாக பேன்யோசு, எக்குவடோர் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள துங்குராகுவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரமாகும். துங்குராகுவா மாகாணத்தின் தலைநகரம் அம்பாட்டோவை அடுத்த இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்கும் பேன்யோசு முதன்மை சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இது "அமேசானுக்கான நுழைவாயில்" என்றறியப்படுகின்றது. அமேசான் காடுகளையும் அமேசான் ஆற்றுப் படுகையில் உள்ள பிற நகரங்களையும் அடையும் முன்னர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரமாக இது இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

துங்குராகுவா எரிமலையின் வடக்கு அடிவாரத்தில் 1,820 மீட்டர்கள் (5,971 அடி) உயரத்தில் பேன்யோசு அமைந்துள்ளது.[2] இந்த எரிமலையின் செயற்பாட்டை தேசிய பல்நுட்பியல் பள்ளியின் புவியியற்பியல் கழகம் கண்காணித்து வருகின்றது.

சுற்றுலா[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baños
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

Guia de Banos Ecuador

Blah Blah Eco Aventura Travel Agency

Ruta del Spondylus

Turisteando Ecuador Informacion Turistica

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேன்யோசு_(எக்குவடோர்)&oldid=2069713" இருந்து மீள்விக்கப்பட்டது