பேதுவாதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேதுவாதாரி (Bethuadahari, வங்காள மொழி: বেথুয়াডহরী] இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் நதியா மாவட்டத்திலுள்ள ஒரு நகர் ஆகும். இந்நகரானது கிருஷ்ணாநகர் நகரிலிருந்து 28 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் கிழக்கு இரயில்வேயின் லால்கோலா உபபிரிவின் கீழ் இந்நகரின் தொடர்வண்டி நிலையம் வருகிறது. இத்தொடர்வண்டி நிலையம் இந்நகரை ஸ்லெட்ஜ் தொடர்வண்டி நிலையத்தோடு இணைக்கிறது. இந்நகர் தேசிய நெடுஞ்சாலை 34 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகத்தில் அதிக அளவு மலைப்பாம்புகளும், மான்களும் காணப்படுகின்றன. இந்நகரானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதுவாதாரி&oldid=1818962" இருந்து மீள்விக்கப்பட்டது