பேச்சு:ஹாட்லிக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கில விக்கிபீடியாவில் ஹாட்லி துறவியால் ஆரம்பிக்கப்ட்டதென்றும் http://www.hartleycollege.com/hweb/hartley/history.shtml இல் பீட்டர் பேர்சிவல் ஆரம்பித்தாகவும் உள்ளது எனவே ஐயமான விடயாமதலினால் இதைக் கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன் --Umapathy 08:48, 16 டிசம்பர் 2006 (UTC)

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலையத்தினுள் முடக்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று.2வருடங்களுக்கு முன்னால் பருத்தித்துறை சென்ற போது பாடசாலை வளாகத்தில் இராணுவ நிலைகளை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது .O/L,A/Lபரீட்சைகளில் யாழ் மாவட்டத்திலே மிகச்சிறப்பான புள்ளியை பெறுகின்ற பாடசாலைகளில் ஒன்றாகும்--கலாநிதி 17:05, 16 டிசம்பர் 2006 (UTC)

கலாநிதி, சுமார் 11 வருட ஞாபகத்தில் எழுதுகின்றேன். நான் பிறந்த இடம் யாழ்ப்பாணம் என்றாலும் நான் யாழ்பாணம் போவது வெகுகுறைவே நன்றாகப் பரீட்சயமான இடமென்றால் வவுனியாதான் பருத்தித்துறையில் ஒரே பெயரில் பிறிதோர் பாடசாலையும் தமிழில் இருதயக் கல்லூரி என்றும் ஆங்கிலத்தில் ஹாட்லிக் காலேஜ் என்றும் உள்ளதாக ஞாபகம் (தவறென்றால் மன்னிக்கவும்) இது பாதுக்காப்பு வலயத்தினுள் வருவதற்குக் கூடுதலான சாத்தியம் உள்ளது. இந்த இருதயக் கல்லூரிக்கு மாலுகடைச் சந்தியூடாகச் செல்லவேண்டும் என்று நினைக்கின்றேன் நீங்கள் இதைச் சொல்கின்றீர்களா எனக்குத்தெரியவில்லை. நீங்கள் மேற்குறிப்பிட்ட பாடசாலையைத்தான் இந்நிலையில் உள்ளதென்றால் தாராளமாகக் கட்டுரையில் மாற்றங்களைச் செய்துவிடுங்கள். --Umapathy 17:30, 16 டிசம்பர் 2006 (UTC)

உமாபதி நான் பிறந்தது பருத்தித்துறையிலேதான் ஆனாலும் வளர்ந்தது,படித்தது மட்டக்களப்பில்,இந்த சமாதான காலத்தில்தான் சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்புக்கிட்டியது.அப்போதுதான் இப்பாடசாலை பற்றி அறிந்தேன்.இப்பாடசாலை உமாபதி நீங்கள் கூறுவது வேறு பாடசாலையாக இருக்கலாம்.எனது வீட்டிற்கு அண்மையில் உள்ள சதாவதானி வாசிகசாலையில் இருந்து பருத்தித்துறை நகரிற்கு செல்லும் வழியிலே இப்பாடசாலை அமைந்துள்ளது.மேலும் ஹாட்லிக்கல்லூரி கடற்கரைக்கு அண்மையாகவே உள்ளது.மேலும் நீங்கள் குறிப்பிட்டது மாலிசந்தி என நினைக்கின்றேன்.--கலாநிதி 17:24, 17 டிசம்பர் 2006 (UTC)

மாற்றங்களுக்கு நன்றி கலாநிதி. ஆம் நீங்கள் சொன்னபடி கடற்கரைக்கு அருகில் உள்ளதுவே ஹாட்லிக் கல்லூரி. இருதயக் கல்லூரி என்று ஓர் பாடசாலை வயல்வெளிகளிக்கு அருகில் இருந்ததாக பழைய ஞாபகம் சரியா தெரியவில்லை. --Umapathy 19:28, 17 டிசம்பர் 2006 (UTC)

நான் ஹாட்லிக்கல்லூரியில்தான் கல்விகற்றிருந்தேன். இருதயக் கல்லூரி Sacred Heart College என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இரு பாடசாலைகளும் 4 km தூரத்தில் இருக்கின்றன.--Kiritharan

மறைந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆரம்பத்தில் படித்தது Sacred Heart Collge இல் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்.--Kanags 11:59, 18 டிசம்பர் 2006 (UTC)