ஹாட்லிக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி Hartley College | |
---|---|
அமைவிடம் | |
பருத்தித்துறை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°49′40.20″N 80°13′58.20″E / 9.8278333°N 80.2328333°E |
தகவல் | |
வகை | பொது மாகாணப் பாடசாலை 1AB |
குறிக்கோள் | Flat lux (ஞானம் மிளிர்க) |
நிறுவல் | 1838 |
நிறுவனர் | வண. பீட்டர் பெர்சிவல் |
பள்ளி மாவட்டம் | வடமராட்சி கல்வி வலயம் |
பள்ளி இலக்கம் | 1007026 |
தலைமையாசிரியர் | த. முகுந்தன் |
ஆசிரியர் குழு | 52 |
தரங்கள் | 6-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 11-19 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 2000 |
இணையம் | hartley.lk |
ஹாட்லி கல்லூரி (Hartley College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும்.[1][2] 1838 ஆம் ஆண்டில் பிரித்தானிய மெதடிச மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையில் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாகும். இது வெசுலிய மதகுரு வண. மார்சல் ஹார்ட்லி என்பவரின் நினைவாக 1916 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி எனப் பெயர் பெற்றது.
வரலாறு
[தொகு]1814 சூன் 29 இல் மெதடிஸ்த
மதப்பரப்புனர்கள் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தனர். 1834 ஆம் ஆண்டில் வண. பீட்டர் பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாண நகரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை ஆரம்பித்தார். பின்னர் 1838 இல் பருத்தித்துறை உவெசுலியன் மிசன் மத்தியப் பாடசாலையை (Wesleyan Mission Central School) 50 மாணவர்களுடன் ஆரம்பித்தார்.[3][4][5]
1860 ம் ஆண்டளவில் இப்பாடசாலை மூடப்பட்டு 1861ம் ஆண்டு டி.பி. நைல்ஸ் என்பவரால் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. இது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து இயங்கி வந்தது. நைல்சு 1861-1868ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்குப் பின்னர் சாமுவேல் என்சுமன் என்பவர் தலைமை ஆசிரியரானார்.[5] 1874 ஆம் ஆண்டில் தற்போதைய இடத்தில் இருந்து இயங்க ஆரம்பித்து வளர்ச்சி பெறத் தொடங்கியது.[3] இதன் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக தாமோதிரம்பிள்ளை செரட் நியமிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் இப்பாடசாலை Christ Church School எனப் பெயர் மாற்றப்பட்டது.[3] 1916 ஆம் ஆண்டில் வண. மார்சல் ஹார்ட்லி என்பவர் இக்கல்லூரியில் வேதியியல் ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். இதனால் இக்கல்லூரி “ஹார்ட்லிக் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5] தாமோதிரம்பிள்ளை 28 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1943 இல் கே. பூரணம்பிள்ளை தலைமையாசிரியரானார்.
1960களில் அனேகமான தனியார் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டதை அடுத்து ஹார்ட்லி கல்லூரியும் 1960 டிசம்பர் 1 இல் அரசு உதவி பெறும் பாடசாலையானது.[4] ஈழப்போர்க் காலத்தில் 1985 முதல் 1990 வரை புத்தளையில் இருந்து இயங்கியது.[3] 1989 இல் இக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.[3] 1996 முதல் 2002 வரை இப்பாடசாலையின் பெரும்பாலான பக்திகளை இராணுவத்தினர் தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். பாடசாலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டது.[6]
இங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்விகற்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்விகற்றார். இப்பாடசாலைக்கு கொழும்பு உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது. 1998 இல் கல்லூரி இணையத்தளம் ஒட்டாவா, கனடாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
தலைமையாசிரியர்கள்
[தொகு]- 1838-60 வண. பீட்டர் பெர்சிவல்
- 1861-68 வண. டி. பி. நைல்ஸ்
- 1868- சாமுவேல் என்சுமன்
- 1874 ஜே. சி. தாமோதரம்பிள்ளை செரார்ட்[9]
- 1906 எஸ். ஏ. பவுல்பிள்ளை
- 1906-12 எஸ். எஸ். கணபதிப்பிள்ளை[9]
- 1912-15 ஈ. எஸ். ஏபிரகாம்
- 1915-43 சி. பி. தாமோதரம்[10][11]
- 1943-67 கே. பூரணம்பிள்ளை[9][12]
- 1967-71 எஸ். இரத்தினசபாபதி
- 1971-73 சி. இராசதுரை
- 1973-75 பி. ஏகாம்பரம்
- 1975-85 டபிள்யூ. என். எஸ். சாமிவேல்
- 1985-93 பி. பாலசிங்கம்
- 1993-97 கே. நடராசா
- 1997-99 பி. வேணுகோபாலவாணிதாசன்
- 1999-00 என். குணசீலன்
- 2000-02 எம். சிறீபதி
- 2003-05 வி. பத்மநாதன்
- 2005- என். தெய்வேந்திரராஜா
ஆசிரியர்கள்
[தொகு]- கே. எஸ். அருள்நந்தி - அறிவியல் ஆசிரியர்[13]
- எச். டி. தம்பையா[14]
பழைய மாணவர்கள்
[தொகு]- வீரசிங்கம் ஆனந்தசங்கரி, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்[15][16]
- கே. டி. அருள்பிரகாசம் - கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்[17]
- சி. ஜே. எலியேசர் - கணிதப் பேராசிரியர்[18][19][20]
- கே. கணேசலிங்கம் - முன்னாள் கொழும்பு மாநகரசபை முதல்வர்[19][21]
- கே. பி. இரத்திநாயக்க - சபாநாயகர்[19][22][23]
- அ. துரைராஜா - முன்னாள் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர்[24]
- இரத்தினசிறி விக்கிரமநாயக்க - முன்னாள் இலங்கை பிரதமர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schools Basic Data as at 01.10.2010. வட மாகாணசபை. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
- ↑ "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. இலங்கை கல்வி அமைச்சு. Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Significant Dates in the Hartley's History". Hartley College.
- ↑ 4.0 4.1 "Hartley College - Our Treasured School". Hartley College.
- ↑ 5.0 5.1 5.2 "பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழா". தினகரன். 25 ஆகத்து 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "HSZ blocks progress of Hartley and Methodist schools". தமிழ்நெட். 17 சூலை 2003. http://tamilnet.com/art.html?catid=13&artid=9458.
- ↑ Maniccavasgar, Chelvathamy (26 சூலை 2008). "Hartley College completes 170 years in sphere of education". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2009-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090805065439/http://www.dailynews.lk/2008/07/26/fea04.asp.
- ↑ "Principals of Hartley College Principals". Hartley College.
- ↑ 9.0 9.1 9.2 "Hartley past principal's funeral held in UK". தமிழ்நெட். 30 ஏப்ரல் 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5974.
- ↑ "Thamotheram, social activist, passes away". தமிழ்நெட். 1 November 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16231.
- ↑ Arumugam 1997, ப. 224–225.
- ↑ Arumugam 1997, ப. 145.
- ↑ Arumugam 1997, ப. 13.
- ↑ Arumugam 1997, ப. 220.
- ↑ Arumugam 1997, ப. 7–8.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (14 June 2008). "Last TULF Leader Standing: Sangaree at Seventy Five". TransCurrents.com. Archived from the original on 7 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகஸ்ட் 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Ex Vice-Chancellor of Eastern University dies". தமிழ்நெட். 8 August 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9602.
- ↑ Arumugam 1997, ப. 52.
- ↑ 19.0 19.1 19.2 Maniccavasgar, Chelvatamby (7 December 2006). "Ganeshalingam, an exceptional human-being". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 3 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080503145405/http://www.dailynews.lk/2006/12/07/news31.asp.
- ↑ Sri Kantha, Sachi. "Christie Jayaratnam Eliezer (1918-2001): A Conquering Scientist". Ilankai Tamil Sangam.
- ↑ Maniccavasgar, Chelvathamy (3 January 2012). "K Ganeshalingam’s 74th birth anniversary: Multi-faceted and multi-dimensional personality". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 3 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703022028/http://www.dailynews.lk/2012/01/03/fea04.asp.
- ↑ "K. B. Ratnayake dies at 80". The Daily Mirror (Sri Lanka). 1 May 2004 இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130403091009/http://archives.dailymirror.lk/2004/05/01/front/3.asp.
- ↑ "Personalities from the south nurtured in Jaffna". தி ஐலண்டு (இலங்கை). 13 January 2002 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304070724/http://www.island.lk/2002/01/13/featur02.html.
- ↑ Arumugam 1997, ப. 233.
- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon.
வெளி இணைப்புகள்
[தொகு]- hartley.lk/ பரணிடப்பட்டது 2017-09-07 at the வந்தவழி இயந்திரம், அதிகாரபூர்வ இணையதளம்
- ஹாட்லிக்கல்லூரி
- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி