பேச்சு:ஸ்டீவன் ஹாக்கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவருடைய பெயர் ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங் என்றல்லவா உச்சரிக்கப்பட வேண்டும்? -சிவகுமார் 06:03, 2 அக்டோபர் 2005 (UTC)

இது ஸ்டீபன் ஹாக்கிங் என்றோ ஸ்டீவன் ஹாக்கிங் என்றோ இருப்பது சரியாக இருக்கும்.--செல்வா 00:36, 21 மார்ச் 2007 (UTC)

ஆம். தலைப்பு 'ஸ்டீபன் ஹாக்கிங்' அல்லது 'ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங்' என்ற தலைப்புக்கு மாற்றப்படவேண்டும்.--Profvk 08:41, 11 ஜூலை 2007 (UTC)

இவர் ஒரு ஆங்கிலேயர், அமெரிக்கர் அல்லர். எனவே ஆங்கிலேய முறைப்படி ஸ்டீபன் ஹோக்கிங் சரியானதே.--Kanags 11:11, 11 ஜூலை 2007 (UTC)

ஆனால் பேசுபவர்களெல்லாம் 'ஹாக்கிங்' என்றே பேசுகிறார்களே!--Profvk 12:08, 11 ஜூலை 2007 (UTC)
கனகு, ஹாக்கிங் என்பதே மிகப்பெரும்பான்மையானவர்களின் வழக்கு. நீங்கள் கூறுவது யாழ்ப்பாணத் தமிழ் நண்பர்களின் தனி வழக்கு என்பதை நான் நன்கு அறிவேன். Tom என்பதை டொம் என்றும் இன்னபிற வழக்கங்களும் இத்தகையதே. ஒருங்கிணைக்கும் முகமாக, பொதுத்தரம் பேணுவதற்காகவும் ஹாக்கிங், டாம் என்று எழுதுவதே நல்லது. ஏனோ இவ்வேண்டுகோளை யாழ்ப்பாண நண்பர்கள் ஏற்க மறுக்கிறார்கள். பொதுச்சீர்மை நம் எல்லோருக்கும் நல்லதுதானே. அருள்கூர்ந்து தவறாக எண்ன வேண்டாம். --செல்வா 14:15, 11 ஜூலை 2007 (UTC)

ஹோக்கிங் என்பது ஈழத்து வழக்கு. ஹாக்கிங், டாம் என்ற உச்சரிப்பு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையெங்கும் சாத்தியமல்ல. Tom - ரொம் - யாழ்வழக்கு, ரொம், டொம் - ஈழத்து வழக்கு. இவை இங்கு தகவலுக்காக மட்டும். பொதுச்சீர்மை தேவைதான்... இத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழக வழக்கை முதன்மைப்படுத்துவது தவறல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் ஹோக்கிங்கை ஹாக்கிங் என்று அழைப்பது வருத்தமளிக்கிறது. :-) --கோபி 15:53, 11 ஜூலை 2007 (UTC)

@Kalaiarasy: போட்டிக்கு அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் இது எங்கு இடம்பெற்றுள்ளது என்று சுட்டி விளக்க முடியுமா? இதனை மதிப்பிடுவதில் நேர்ந்த தாமதத்திற்கு வருந்துகிறேன். --இரவி (பேச்சு) 17:19, 29 மே 2018 (UTC)

10,000 கட்டுரைப் பட்டியலில் இருப்பதை இப்போது தான் கண்டேன். நான் பெயரை ஆங்கிலத்தில் இட்டுத் தேடியதால் பட்டியல்களில் சிக்கவில்லை. குழப்பத்துக்கு வருந்துகிறேன். இப்போது கட்டுரை ஏற்கப்படுகிறது. எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் உங்கள் கூடிய பங்களிப்பினை எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:23, 29 மே 2018 (UTC)