பேச்சு:விசயாலய சோழன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயாலய சோழன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விசயாலய சோழன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விசயாலய சோழன் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விசயாலய சோழன் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை[தொகு]

விஜயாலய சோழன் என்றும் ஒரு கட்டுரை இருக்கிறதே. --கோபி 17:46, 13 ஜூலை 2006 (UTC)

விஜயாலய சோழன் பக்கத்தின் உள்ளடக்கங்கள் தற்பொழுது இங்கு நகர்த்தப்பட்டுள்ளன--ரவி 08:25, 14 ஜூலை 2006 (UTC)

விஜயாலய சோழனின் தந்தை[தொகு]

கட்டுரையில் விஜயாலய சோழன் காந்த மனோகரச் சோழனின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சான்றாதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. விஜயாலய சோழனின் தந்தை "ஒற்றியூரான்" என அழைக்கப்பட்ட குமாராங்குச சோழன்" ஆவார். 1979 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் "வேளஞ்சேரி செப்பேடுகள்" என அழைக்கப்படுகின்றன. இவை முதலாம் பராந்தக சோழனின் செப்பேடுகளாகும். இந்தச் செப்பேடுகளில் விஜயாலய சோழன், ஒற்றியூரானின் மகன் எனக் கூறப்பட்டுள்ளது. ஒற்றியூரான் என்பது திருவொற்றியூரைச் சேர்ந்தவர் என்று பொருள் படும். ஆனால் செப்பேட்டில் ஒற்றியூரானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதே போல, விஜயாலய சோழரின் பராக்கிரமச் செயல்கள் விபரமாக எழுதப்பட்டுள்ள போதிலும் விஜயாலய சோழன் என்று பெயர் குறிப்பிடாமல் "ஒற்றியூரான் மகன்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அக்கால வழக்கப்படி சொந்தப் பெயரை ஏடுகளில் குறிப்பது வழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். (http://tamilartsacademy.com/articles/article28.xml)

ஆனால் விஜயாலய சோழனின் தந்தை குமாராங்குச சோழன் என்பது ஈழத்து வரலாறு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடையில் கர்ணனை ஒத்த குமாராங்குசனுக்கு விஜயாலயன் சீர்பாததேவி என இரு பிள்ளைகள். என்று அதில் உள்ளது. குமாராங்குச சோழனை "கொடையில் கர்ணனை ஒத்தவன்" என்று 3-ஆம் நந்திவர்மன் (விஜய நந்திவர்மன்) செப்பேட்டில் (வேலூர்பாளையம் செப்பேடுகள்) குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் பல்லவ பேரரசுக்குக் கீழ் சிற்றரசாக இருந்த சோழ மன்னன் குமாராங்குச, பல்லவ மன்னனிடம் 'இறையூர் உடையான் நம்பன்" (ஆக்ஞாபதி - Executer) மூலமாக ஒரு விண்ணப்பம் செய்தான். திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் இருந்த சிவன் கோவிலுக்கு நன்கொடை வழங்க இந்த விண்ணப்பம் கோரியது. செப்பேட்டில் இது பற்றிய முழு விபரம் உள்ளது. அச்சமயம் இந்த நிகழ்ச்சியை "மகேஸ்வர மனோதீர" என்ற புலவர் பாடலாக (Prashasti - புகழ்ச்சி) பாடியுள்ளார். அந்தப் பாடலிலேயே 'கொடையில் கர்ணனை ஒத்த குமாராங்குச சோழன்' என்ற வரிகள் வருகின்றன. (https://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_98_velurpalaiyam_plates_nandivarman.html)

ஆகவே ஈழத்து இலக்கியம் நம்பகமானது என்று துணிந்து கூறலாம். (https://sites.google.com/a/veeramunai.com/veeramunai/our-village/Soola-ilavarasi-Serpathaeviyin-varukai)

இதிலிருந்து விஜயாலய சோழனின் தந்தை "ஒற்றியூரான்" என அழைக்கப்பட்ட குமாராங்குச சோழன் என அறியலாம்.

(குமாராங்குச தெலுங்கு இனத்தவர் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாதங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த இடத்தில் நான் அதற்குள் போக விரும்பவில்லை.)

யாராவது இந்த ஆதாரங்களைப் படித்து, கட்டுரையில் மாற்றம் செய்ய விரும்பினால் செய்யலாம். எனக்குத் தெரிந்த தகவல்களை இங்கே தந்தேன். நன்றி. வணக்கம் UKSharma3 உரையாடல் 01:51, 27 பெப்ரவரி 2022 (UTC)

வணக்கம்.
குமாராங்குச சோழன் தெலுங்கன் என்பதற்கான விடயங்களை தருக.நன்றி . 157.46.82.119 17:51, 12 சூலை 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசயாலய_சோழன்&oldid=3785168" இலிருந்து மீள்விக்கப்பட்டது