பேச்சு:வாத்து (இனம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்த கருத்து[தொகு]

  • இக்கட்டுரையின் தலைப்பு எந்தத் தரவிலிருந்து பெறப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். Goose என்ற பொதுப்பெயரில் உள்ளடங்கும் ஒரு சிற்றினமான Bar-headed goose (Anser indicus), கூஸ் வாத்து என்று இங்கு[1] கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் பறவை ஆர்வலர்களால் மதிக்கப்படும் ஒன்றாக இருந்தாலும், இன்றைய கால கட்டத்தில் அவ்வளவு பொருத்தமாக இருப்பதில்லை.
  • இதைவிடவும் தரமான நூல்கள்/கையேடுகள் (தமிழில்) புழக்கத்தில் உள்ளன[2] [3] [4] [5]. அத்தகைய நூல்களை மேற்கோள் கொண்டு தலைப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. --PARITHIMATHI (பேச்சு) 10:51, 25 ஏப்ரல் 2020 (UTC)
  • டாக்டர். க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் (1998) (பக்கம் 20 வரிசை எண் 37) நூலில் GOOSE Barheaded (Anser indicus)-இன் ஒரு பெயராக கூஸ்வாத்து என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்தே இக்கட்டுரைக்கு கூஸ் வாத்து என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் இக்கட்டுரை ஒரு தனி உயிரினத்தைக் குறிக்காமல் ஒரு குடும்பத்தில் உள்ள பல உயிரினங்களைக் குறிப்பதால் இக்குடும்பத்திற்கு மற்ற நூல்களில் பெயர் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இந்த நூல்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்யும் முறையில், விலை செலுத்திப் பெறும் ஏதேனும் இணையதளத்தில் கிடைத்தால் குறிப்பிடவும். --Mereraj (பேச்சு)

மேற்கோள்கள்[தொகு]

  1. Badshah, M.A. Check List of Birds of Tamil Nadu (with English, Scientific and Tamil Names). பக்கம். 23
  2. சி. பாலச்சந்திரன், பு. பா. பாலாஜி, வே. திருநாவுக்கரசு (2019). தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு . தமிழ்நாடு வனத்துறை
  3. ரிச்சர்ட் கிரமிட், டிம்  இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக். 126:1. A&C Black Publishers, London
  4. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். உலகம் வெளியீடு, சூலூர்.
  5. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

பெயர்[தொகு]

A goose is a bird of any of several waterfowl species in the family Anatidae. என்பதற்கமைய பெயர் மாற்றப்பட்டுள்ளது. கூஸ் வாத்து என்ற பெயர் ஆங்கில + தமிழ் கலப்புப் பெயர். --AntanO (பேச்சு) 03:00, 12 சனவரி 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாத்து_(இனம்)&oldid=3089524" இலிருந்து மீள்விக்கப்பட்டது