பேச்சு:வறட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வறட்சி, வரட்சி எது சரி?--Kanags \பேச்சு 10:14, 17 மார்ச் 2009 (UTC)

வறட்சி--ரவி 14:05, 17 மார்ச் 2009 (UTC)
வறட்சி என்பதுதான் சரி, ஆனால் வரட்டு, வரட்டி என்னும் சொற்களும் வறண்ட தன்மையைக் குறிக்கும் சொற்கள். சாணம் (மாடுகளின் மலம்), ஈரமாக இருக்கும் பொழுது வட்டமாக தட்டி, காய்ந்தபின், எரி பொருளாகப் பயன்படுவது வரட்டி. வரட்டு என்பது ஒரு நோய்வகை (வரட்டுச்சோகை). வரட்டுப் பசு (பால் சுரக்காத பசு). வரட்டு-வறட்டு போலிகள். வரள்-வறள் போலிகள். வறு என்பது வினைச்சொல். வறு என்பது வறள், வறண்ட, வறட்சி என்று ஆகும். ள்->ண்-> ட் என்பது தமிழ் இயல்பு. உருள், உருண்டை, உருட்டை (உருட்டு); வள், வளை, வணக்கு (வணங்கு), வட்டம், வட்டை; கண், காண் காட்சி; பள், பண், பாணன், பாட்டு; உள்->உண் (உள்ளே இடுவது உணவு, உட்கொள்ளுதல் என்றும் கூறுவதுண்டு)->உட். எனவே வறட்சி என்பது சரியான சொல். வறு->வறள்->வறண்ட->வறட்சி. காய்ந்த நிலத்தில் வளரும் செடிக்கு வறளி என்று பெயர்.உலர்ந்த எதனையும் வறளி எனலாம். வறளி என்றால் ஏழ்மை என்றும் பொருள். வறள்->வறளி. இவ்வகையாக சொற்களை சேர்ந்தெண்ணும் பொழுது அது கலைச்சொல்லாக்கத்திற்கும் துணை செய்யும். --செல்வா 14:32, 17 மார்ச் 2009 (UTC)
அட, வறட்சிக்குப் பின்னால் இத்தனை (சொல்)வளமா? -- சுந்தர் \பேச்சு 16:37, 17 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வறட்சி&oldid=353870" இருந்து மீள்விக்கப்பட்டது