பேச்சு:லீக்கின்ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

இங்கே தலைப்பு தமிழிலக்கணத்துக்குச் சிறிதும் பொருந்தாதவாறு அமைந்துள்ளது. இலீக்குதந்தைன் என மாற்றியமைப்பது எனது பரிந்துரை.--பாஹிம் (பேச்சு) 16:38, 3 பெப்ரவரி 2013 (UTC)

அரசு[தொகு]

ஆங்கிலத்தில் பல்வேறு வகையான அரசுகளுக்கும் வெவ்வேறு சொற்கள் கையாளப்படுகின்றன. தமிழில் அரசு என்ற பதம் எவ்வகையான அரசையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல். ஆயினும் ஒரு சில சொற்கள் தனித்தமிழில் அல்லது வடமொழி தழுவிய தமிழில் வழங்கப்படுகின்றன. இங்கே Principality என்பதற்கு முறையான தமிழ்ப் பதம் வழங்கப்படவில்லை. எனவே, இத்தகைய சொற்களை முறையாகத் தமிழ்ப்படுத்திக் கொண்டால், கட்டுரைகளிற் பயன்படுத்த உதவியாக இருக்கும்.--பாஹிம் (பேச்சு) 06:37, 8 மார்ச் 2015 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

வணக்கம், மூல உச்சரிப்புக்கு தகுந்தாற் போல தலைப்பை மாற்றியிருக்கின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 00:13, 21 ஆகத்து 2015 (UTC)

@Winnan Tirunallur:, லீச்டன்ஸ்டைன் என்பது தானே மூல ஒலிப்பு. அப்படியிருக்க லீக்கின்ஸ்டைன் என எப்படி ஒலிக்கும்?--Kanags \உரையாடுக 00:19, 21 ஆகத்து 2015 (UTC)
தாங்கள் ஆங்கில உச்சரிப்பின் ஊடாக அதை பலுக்குகின்றீர்கள். ஜெர்மானிய மொழியில் ch என்ற ஒலிப்பு க் என்பதை ஒத்து மாறிவிடுகின்றது. எடுத்துக் காட்டுக்கு இங்கு சென்று உச்சரிப்பை சரி பார்த்து கொள்ளலாம் தோழரே. --Winnan Tirunallur (பேச்சு) 00:21, 21 ஆகத்து 2015 (UTC)
Liech-ten-stein என்ற சொல்லை லீக்-ன்-ஸ்டைன் என்று தான் ஜெர்மானிய மொழியில் உச்சரிக்க வேண்டும். இதில் ch என்பது க் என்பது போலவும், ten என்பதில் உள்ள t ஒலி மறைந்தும், குறுகியும் ஒலிக்கும். --Winnan Tirunallur (பேச்சு) 00:23, 21 ஆகத்து 2015 (UTC)
மிக மென்மையாக இருந்தாலும், செருமானிய IPA ஒலிப்பில் t எழுத்து காணப்படுகின்றது. அது மறைக்கப்படவில்லை. அது போன்றே தமிழிலும் எழுதப்பட வேண்டும். இங்கு கேட்டுப் பாருங்கள். அனைத்து மொழிகளையும் நாம் மிகத் துல்லியமாக எழுத முடியாது. ஆங்கில விக்கியில் லீக்டன்ஸ்டைன் என்றே ஒலிப்புத் தரப்பட்டுள்ளது. தமிழில் இலீக்டன்ஸ்டைன் என எழுதுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 00:47, 21 ஆகத்து 2015 (UTC)
ஜெர்மானிய மொழியில் t என்ற எழுத்து இல்லை என்று நான் சொல்லவில்லையே. சொற் சேர்க்கைகளின் போது, t என்ற எழுத்தின் ஒலிப்பு குறுகியோ, தொக்கியோ ஒலிக்கும். தாங்கள் ஆங்கில முறையில், அல்லது ஆங்கில தளங்கள் ஊடாக Liech-ten-stein என்ற சொல்லை ஒலிக்கச் செய்து கேட்கும் போது, அது ஆங்கில ஒலிப்பு முறைக்கு ஏற்றார் போல மாற்றப்பட்டே ஒலிக்கின்றன. ஜெர்மானிய ஒலிப்பு முறையில் Liech-ten-stein எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்பதை விக்கி ஒலிப்பதிவே இருக்கின்றது. * About this soundAudio  --Winnan Tirunallur (பேச்சு) 09:53, 21 ஆகத்து 2015 (UTC)
ஐரோப்பிய பெயர்ச்சொற்களை தமிழ்ப்படுத்துவதில் விக்கி எந்தமாதிரியான நடைமுறையைக் கொண்டிருக்கின்றது என்பதில் பெருங்குழப்பம் நிலவுகின்றது. தற்காலத் தமிழ் எழுத்துக்களுக்கு உட்பட்டு மூல ஒலிப்பை ஒத்து நாம் பெயர்ச்சொற்களை தமிழில் எடுத்தாள முடியும் என்பது எனது எண்ணம். கடுமையான ஒலிபெயர்ப்பையோ, ஆங்கில வழி ஒலிபெயர்ப்பையோ, கடுமையான செந்தமிழ் நடைவடிவத்தையோ விக்கியில் திணிக்கப்படக் கூடாது என்பது எண்ணம். விக்கி என்பது ஓர் அறிவுக் களஞ்சியமே ஒழிய, அது மொழி வளர்க்கும் ஆய்வுக் கூடமோ, தனிநபர்களது பொழுதுபோக்கு பக்கமோ இல்லை என நான் நினைக்கின்றேன். ஆகவே, ஒலிபெயர்ப்புகளில் ஒரு பொது நடைமுறையை கொண்டு வர தோழர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்பதும், அது தமிழ் விக்கியை பொதுமக்கள் பாரியளவு பயன்படுத்த உதவும் வேண்டும் என்பதும் எனது பேரவா. --Winnan Tirunallur (பேச்சு) 09:53, 21 ஆகத்து 2015 (UTC)
@Fahimrazick:, உங்கள் பரிந்துரையையும் தெரிவித்தால் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 12:55, 29 செப்டம்பர் 2015 (UTC)

நான் முதலிலேயே இலீக்குதந்தைன் என்று குறித்திருக்கிறேனே.--பாஹிம் (பேச்சு) 13:04, 29 செப்டம்பர் 2015 (UTC)

சிற்றரசு[தொகு]

Principality என்ற ஆங்கிலப் பதத்திற்கு இணையாக சிற்றரசு என்ற சொல்லை பயன்படுத்துகின்றேன். Principality என்பதன் நேரடிப் பொருளானது, ஒரு இளவரசர் மிகச் சிறிய நிலப்பகுதியை ஆட்சி செய்கின்ற போது, அந்த நிலப்பகுதி Principality என்றழைக்கப்படும். பொதுவாக மாமன்னர்கள் பெருநிலங்களையும், இளவரசர்கள் ( Princes ) சிறு நிலப் பகுதிகளையும் சிற்றரசுகளாக ஆட்சி செய்துள்ளனர். காலப் போக்கில் இத்தகைய சிற்றரசுகள் எல்லாம் ஒழிந்து விட்டன. ஆனால் ஒரு சில சிற்றரசுகள் ஐரோப்பாவில் இன்னமும் இயங்கி வருகின்றன. --Winnan Tirunallur (பேச்சு) 00:28, 21 ஆகத்து 2015 (UTC)